அமெரிக்காவின் நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31). ரோபிசியஸ் போதை பொருள் கொடுத்து பெண்களை கற்பழிப்பது வழக்கம், இதற்கு அவர் காதலியும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பார்களுக்கு சென்று அங்கு வரும் அழகிய பெண்களிடம் பேசி வசியம் செய்து அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி கற்பழித்து வந்தார். இந்தநிலையில் அவரால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் செய்தனர்.
அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் கொடுத்து கற்பழித்ததாகவும் புகார் செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸ் செல்போனை சோதனை செய்தபோது 1000-திற்கும் மேற்பட்ட பெண்களுடன் இருப்பது போன்று ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் இருந்தன. அதில் சில பெண்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்கு ஆளாகியிருந்தது தெரிவந்தது.
பின்னர் ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். அதையடுத்து100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்தது போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.