Home உறவு-காதல் உங்கள் ஆளிடம் இதையெல்லாம் சொல்லிபாருங்கள்

உங்கள் ஆளிடம் இதையெல்லாம் சொல்லிபாருங்கள்

55

உங்கள் கணவர் உதவியின்றி, நீங்கள் பெற்றோராக மாறி இருக்க முயலாது; அவரின் பாசமும் அன்பும், அரவணைப்பும் நீங்கள் ஒரு தாயக மாறவும், அதன்பின்னர், பெற்றெடுத்த குழந்தையை வளர்க்கவும் மிகுந்த துணை செய்திருக்கும்..! உங்கள் கஷ்டம் நஷ்டம் என எல்லாவற்றிலும் பங்கெடுத்து, உறுதுணையாக இருந்துவரும் கணவருக்கு தந்தையர் தினத்தன்று நீங்கள் கட்டாயம் கூற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!

1. நீ இல்லாமல் சாத்தியமில்லை..!
கணவரிடம், அவரில்லாது குழந்தையை வெற்றிகரமாக பெற்றிருக்கவோ, இந்த அளவிற்கு வளர்த்திருக்கவோ முடியாது என்பதை, நீங்கள் காதலுடன் தெரிவிக்க வேண்டியது அவசியம்.! இந்த ஒரு சொல் உங்கள் கணவரை மேலும் குடும்பத்திற்காக பாடுபட வைக்கும்..!

2. உனக்கு எனது நன்றி..
பிரசவ காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால், கணவரை படாதபாடு படுத்தியிருப்பீர்; மேலும் குழந்தையை பெற்றபின், அதனை வளர்க்கும் எண்ணத்தில் கணவரை சரிவர கவனிக்காது விட்டிருப்பீர்; ஆனால், உங்கள் கணவர் இவை அனைத்தையும் புரிந்துகொண்டு, உங்கள் மீது அச்சூழ்நிலைகளிலும் அன்பு காட்டி, ஆதரவு அளித்த கணவருக்கு நீங்கள் கட்டாயம் அன்பு செலுத்த வேண்டும்..!

3. நீ, உன் செயல்கள் அருமை…
நீங்கள் சமையலை எவ்வளவு கேவலமாக செய்திருந்தாலும், அதனை உண்டு, உங்களை பாராட்ட தவறுவதில்லை உங்கள் ஆசைக் கணவர்; அப்படிப்பட்ட கணவரிடம், உனது பாராட்டுக்கள் தான், என்னை செதுக்கின என்று மறவாமல் கூறுங்கள்..! ஏனெனில் உங்கள் கணவர் அப்படி கூறிடாவிடின், உங்கள் செயல்களை மேம்படுத்தி செய்து உண்மையிலேயே, நன்றாக சமைப்பவராகவோ அல்லது வேறு எந்த செயலாயினும் அதில் உங்கள் திறமை மேம்பட்டிருக்காது..! எப்படி கணவர், உங்களை பாராட்டுகிறாரோ, அதேபோல் அவரின் செயல்களையும் நீங்கள் பாராட்டி அவரை உற்சாகப்படுத்துங்கள்..!

4. உனக்கு நான் இருக்கிறேன்..!
நீங்கள் தான் கணவருக்கு எல்லாம்..! உங்களது பாராட்டுக்கள், அன்பு, அக்கறை, ஆதரவு போன்றவை தான் அவரை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அடித்தளங்கள்..! ஆகவே, கணவர் எச்செயல் ஆற்றினாலும், அதில் அவரை ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருங்கள்..! அதேசமயம் கணவர் ஏதேனும் தவறு செய்தால், அதை சுட்டிக்காட்டவும் தயங்காதீர்..! மொத்தத்தில் உனக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கொடுங்கள்..! கணவருக்கு வேலை விஷயத்தில் ஏதேனும் தேவை அல்லது பிரச்சனை இருந்தாலும், தயங்காது உங்களால் முடிந்த உதவிகளை ஆற்றுங்கள்..!

5. குழந்தைக்கு நீயும் தேவை..!
நம் குழந்தை நன்றாக வளர, நான் மட்டும் போதாது; நீயும் தேவை..! உன்னால் மட்டுமே கற்றுக்கொடுக்க முடிகிற சில விஷயங்கள் உள்ளன; அவற்றை என்னால் கூட குழந்தைக்கு அளிக்க முடியாது.! நம் குடும்பம், குழந்தை எனும் வண்டியை வெற்றிப்பாதையில் ஓட்ட, நீயும் அவசியம்.., நானும் அவசியம்.! குடும்பத்தை ஒன்றாய் இணைந்து உயர்த்துவோம்.., வா! என்பது போன்ற விஷயங்களை அடிக்கடி கணவருக்கு கூறி, குடும்பத்தில் ஒருவித பிணைப்பை ஏற்படுத்த வேண்டியதும் மனைவியரின் கடமையே!