இந்த உலகில் காதல் என்ற பெயரில் பல இளைஞர்கள், கொலை, ஆசிட் வீச்சு என பல கீழ்தனமான வேளைகளில் ஈடுபடுகின்றனர். இப்படி பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்படுவது காதலா…? முதலில் காதல் என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். பின் காதலிக்க துவங்குங்கள்.
காதல் டிப்ஸ்:
உங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உங்களுடைய பாட்னர் மற்ற ஆண் நபர்களுக்கு கொடுத்தால். அவரை விட்டு விலகுவது சிறந்தது. பின் எல்லாம் தெரிந்து தானே பழகினாய் என பல கேள்விகள் எழுந்து அந்த காதல் தோல்வியில் முடியவும் வாய்ப்புள்ளது. அதற்காக நல்ல நண்பர்களுடன் உங்கள் பாட்னர் பழகுவதை தவறான கண்ணோட்டம் கொண்டு கூட பார்க்காதீர்கள்.
உங்கள் நண்பர்கள் அவருடைய காதலர் அல்லது காதலியுடன் நன்றாக பழகுகிறார், பேசுகிறார் என்பதற்காக அவரை பார்த்து பொறாமையில் நாமும் ஒருவரை காதலிக்க வேண்டும் என எண்ணாதீர்கள். இப்படி பட்ட காதலால் நாளை நீங்களே ஏமார்ந்து போய் நிற்கும் வாய்ப்பு உள்ளது.
உங்களோடு உங்கள் காதலன் அல்லது காதலி மகிழ்சியாக இருக்கும் போது, பழைய சண்டைகளை மறந்து அவருடன் அன்பாக பழகுங்கள். பழைய கதையை பேசினால் பிரச்சனைகள் தான் மிஞ்சும்.
ஒருவரை நன்றாக புரிந்துக்கொண்டு பழகுங்கள், அவருடைய ரசனையும், உங்களுடைய ரசனையும் ஒற்று போகிறாதா என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள், இது வாழ்கை முழுக்க நீடிக்க கூடிய பந்தம். காதலில் மிகவும் முக்கியமானது. எதிர்பாலினத்தின் மீது உள்ள ஈர்ப்பை கட்டுப்படுத்தி, தெளிவான முடிவு எடுப்பது. ஒரு பார்வையில் ஒருவரை பற்றியும், அவருடைய குணத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள முடியாது. வெளிதொற்றதை பார்த்து மட்டுமே ரசிக்க முடியும் என்பது தான் உண்மை.
அதே போல் காதலித்தவர்கள், சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றாலும் அது பற்றி கவலைப்படாதீர்கள். அவர்மீது விரோதம் கொள்வதாலோ, பழிவாங்க நீங்கள் முயற்சிகள் எடுப்பதலோ உங்கள் எதிர்கால வாழ்கை தான் வீணாகும்.
ஒருவர் உங்களை விட்டு சென்றால், அவரை விட நல்லவர், குணமுள்ளவர், உங்கள் மீது அன்புக்கொண்டவர் உங்களை தேடி வந்துக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் நினையுங்கள்.
வாழ்கை மிகவும் அழகானது. மனிதனாக பிறந்தால் மட்டுமே இந்த உலகத்தையும், அனைத்து சந்தோஷத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும். மனிதனின் வாழ்க்கையில் காதல் ஒரு பகுதி அல்ல, வாழ்கை முழுவதும் தொடர்ந்து வரும் உணர்வு. எனவே எதற்காகவும் கொலை தற்கொலை போன்ற முடிவை தேர்வு செய்து வாழ்க்கையை வீண் செய்யாதீர்கள்.