காதல் முளைப்பதற்கு எதுவுமே தேவையில்லை. வெறும் அன்பும் குணங்களும் போதும் என்ற காலமெல்லாம் போய், இப்போது காதலிக்கும் ஆண்களுக்கு சில தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டுமென்ற என்ற நிலை வந்துவிட்டது.
அப்படி காதலிக்கும் ஆண்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?
நிச்சயம் நல்லவனாக நடிக்கத் தெரிய வேண்டும்
நிறைய பொய் சொல்லணும்
நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை தியாகம் செய்ய வேண்டும்.
நிறைய மொக்கை ஜோக் தெரிஞ்சி வச்சுக்கணும்.
பொண்ணுங்க போடுற மொக்கை ஜோக்கை தாங்கிக்கிற நல்ல மனசு இருக்கணும்.
பொண்ணுங்க என்ன தப்பு பண்ணினாலும் கண்டுக்காம இருக்கணும்.
காதலிக்கு பிடிக்கிற கலர், பாட்டு, நடிகர், நடிகை இதெல்லாம் உங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு வாய் கூசாம பொய் சொல்லணும்.
நைட்ல கண் முழிக்கணும்.
மொபைல்க்கு பில் கட்ட மட்டுமே லம்ப்பா ஒரு அமௌண்ட் எப்பவும் கையில் வச்சுக்கணும்.
இத்தனையும் நாம செஞ்சாலும் லாஸ்ட்ல இன்னொரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போகும்போது, எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடணும். நிச்சயம் த்ரிஷா இல்லனா திவ்யான்னு மனச தேத்திக்கிற மனப்பக்குவம் வேண்டும்.