காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக் குள் நுழைந்தப் பின்னர் அனைவ ரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்து விட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. அவ்வாறு மாறும்போது பல பிரச்சனை கள் ஏற்படும். எனவே திருமணத்திற்கு பின் கணவர்களாக நடத்து வதற்கு பதிலாக, காதலிக்கும் போதோ அல்லது நிச்சயதார்தத்திற்கு பின்னரோ பொறுப்புள்ள கணவராக பயிற்சிக்க வேண்டும்.
பொதுவாக ஆண்களுக்கு பொறுப்புணர்வு பெண்களை விட குறைவு தான். மேலும் சில ஆண்களுக்கு காதலி கிடைத்து விட்டால், ஒருவித அலட்சிய ம் வந்துவிடும். பின் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்து, குடும்பத்தை நல்ல படியாக நடத்த வேண்டும் என்ற எண்ண மானது குறைந்துவிடும். ஆனால் உண்மையில் காதல் வந்தபின்தான் ஆண்கள் மிகவும் பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, பொறு ப்பின்றி நடந்தால், நல்ல விதமாக சென்ற காதலும், பிரிவில் முடி யும். எனவே அவ்வாறு பொறுப்பில்லா மல் சுற்றும் காதலனை, ஆரம்பத் திலேயே கணவரு க்கான பொறுப்புகளுடன் பயிற்சித் தால், ஒரு நல்ல கணவனாக எப்போதும் இருப்பார்கள்.
ஆகவே இப்போது எப்படி காதலனை ஒரு நல்ல கணவனாக பயிற் சிப்பது என்று சில வழிகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவர் களின் மனதை புண்படுத்தாமல், அவர்க ளுக்கு தெரியாமலேயே கணவர்கள் எப்படி நடப்பார்க ளோ அப்படி மாற்றி பழக்கப்படு த்திவிடுங்கள்.
திருமணத்திற்கு பின், உங்களின் ஏடிஎம் உங்கள் கணவர்தான். அவர் தான் அப்போது எந்த ஒரு செலவையும் செய்வார்கள். எனவே காத லிக்கும் போதே, அத்தகைய செலவை செய்ய வையுங்கள்.
மருத்துவரிடம் செல்லும்போது, அழை த்துச்செல்லுங்கள். ஏனெனி ல் தற்போது பெரும்பாலான ஆண்கள் அதிக வேலை காரணமாக திருமணத்திற்குபின் சரியா க கண்டுகொள்வதில்லை. மேலும் திரு மணத்திற்குபின், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியதும் அவரது கடமையே.
திருமணத்திற்கு பின் அனைத்து வேலைக ளையும் பெண்களே செய்யப் போவதி ல்லை. கணவன், மனைவி இருவரும் தான் செய்ய வேண்டும். எனவே சமையல் செய்யப்பழகுமாறு சொல்ல வேண்டும்.
பொதுவாக ஆண்கள் பெண்களைவிட சூப்பராக சமைப்பார்கள். என வே உங்களுக்கு பிடித்த சமையல் எது என்று சொல்லி, அதை எப்படி செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொடுத்து, பழக்க வேண்டும்.
காதலிக்கும் போது அடிக்கடி உங்களது பெற்றோரை சந்தித்து பேசு மாறு செய்ய வும். அதுவும் இரவு நேர விருந்து செய்து, அழைத்து பேசினால், நன்றாக இருக்கும். இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வைத் தால், திருமணத்திற்கு பின் உங்களது பெற்றோ ரை சந்திப்பதில் மறுப்பு ஏதும் கூறமாட்டார்கள்.
காதல் செய்த பின்னர், காதலனுடன் ஷாப்பிங் செல்ல ஆரம்பிக்க வேண்டும். இதனால் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று ஷாப்பிங் பில்லை அவர்கள் கட்டுவார்கள் மற்றொன்று நீங்கள் ஷாப்பிங் எப்படி செய்வீர்கள் என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருப்பார் கள்.
காதலிக்கும் போதே கணக்குவழக்கு பார்க்க வேண்டும். உதாரண மாக, வாடகை கொடுப் பது, சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்குவது போன்ற வற்றை இருவரும் ஆலோசிக்க வேண்டும். மேலும் இருவரும், இருவரது வங்கி நிலவ ரத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எந்த மாதிரியான வீடு உங்களுக்குப் பிடிக்கும் என்று ஆரம்பத்திலே யே சொன்னால், திருமணத்திற்கு பின் இருவரும் அந்த மாதரியான வீட்டிற்கு சந்தோஷமாக குடிபுகலாம்.