பொதுவாகவே பெண்களைவிட, ஆண்களுக்கு காதலித்துக் கொண்டிருக்கும் போதும் கூட மற்றவர்களுடன் பழக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது போன்ற சமயங்களில் நாம் பேசும் பேச்சு வேண்டாத சஞ்சலம் அல்லது நட்பு என்பதை தாண்டி வேறு உறவுகள் அல்லது பிரச்சனைகளுக்குள் சிக்க வைத்துவிடும். எனவே, காதலித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் வேறு பெண்களிடம் இந்த 6 விஷயங்களை பேசுவதை அதிகம் தவிர்த்து விடுங்கள்…
விஷயம் #1 மனம்விட்டு பேச ஒரு நல்ல தோழி வேண்டும் என கூறக் கூடாது. இது, நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக பழக விரும்புவது போன்ற பிம்பத்தை உண்டாக்கும். மேலும், இப்படியான நட்பில், உங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளவே கூடாது.
விஷயம் #2 உங்களுக்கும், உங்கள் காதலி / மனைவிக்கு இடையே நேற்று சண்டை ஏற்பட்டது என்பதை எக்காரணம் கொண்டும் வேறு பெண்களிடம் கூற வேண்டாம். இது அவர்கள் உங்களிடம் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள வைக்கும்.
விஷயம் #3 முக்கியமாக உங்கள் இருவருக்குள் நடக்கும் தாம்பத்திய உறவை பற்றி வேறு பெண்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். இது அந்த பெண்ணையும் சஞ்சலம் அடைய வைக்கும். இதனால், உறவில் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.
விஷயம் #4 நீ காதலிக்கிறியா? மிகவும் நார்மலான கேள்வி தான். ஆனால், இது ஏற்படுத்தும் விளைவுகள் தான் அதிக நெருக்கத்தை உண்டாக்கும். இந்த கேள்வி ஒரு ஆண் தன்னுடன் உறவில் இணைய தான் விரும்பு கேட்கிறான் என பல பெண்கள் கருதுகின்றனர்.
விஷயம் #5 “நீ இல்லாம எப்படி இருக்கிறது என தெரியவே இல்லை…” என்ற ஆசையை ஏற்படுத்தும் பேச்சை நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இது உங்கள் காதலி / மனைவியை விட அந்த பெண்ணுக்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.
விஷயம் #6 அவர்களை பற்றி அறிந்துக் கொள்ள முயற்சிப்பது போன்ற பேச்சுக்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இது நீங்கள் பற்றி அறிந்தக் கொள்ள ஆசைப்படுவது போன்ற பிம்பத்தை உண்டாக்கும்.