காதல் உறவு இணக்கம்:காதல் இதயத்தில் இருந்து வருகிறதா? அது மூளை தொடர்புடையதா என்று ஒரு ஆராய்ச்சி நடந்து வரும் வேலையில் காதலித்தால் அது இதயத்தை பாதுகாக்கிறது. இதயநோய்கள் ஏற்படாமல் காதல் தடுக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
இதயநோய் வராது
திருமணம் மூலம் ஏற்படும் குடும்ப உறவு, தம்பதியருக்கிடையே ஏற்படும் அந்நியோன்யமான தாம்பத்யம் இதயநோய்களை தடுக்கிறது என்று பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்பான உறவு மூலம் கிடைக்கும் நேசம் பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறதாம் இதனால் இதயநோய் ஏற்படுவது குறைகிறது என்கின்றார் கொல்கத்தாவில் பிஎம். பிர்லா இதய ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் அனில் மிஸ்ரா.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
காதல் நினைவுகளும், காதல் உணர்வுகளுமே நம்மை உயிர்போடு வைத்திருக்குமாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் எந்த நோயும் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.
இது தொடர்பாக 112 கல்லூரி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காதலில் இருந்த மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தது தெரியவந்தது. இதேபோல் தம் துணையுடன் வாரம் இரண்டுநாள் உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
மூளை உற்சாகமடையும்
காதலித்துப் பாருங்களேன். மனதில் எப்போதும் உற்சாகம் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும். புதிதாய் பிறந்ததைப் போல உணர்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். நம் இன்ப துன்பத்தில் பங்கு கொண்டு நம் நலனில் அக்கறை கொள்ள நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே உற்சாகப்படுத்தும். துன்பம் வரும் நேரத்தில் சாய ஒரு தோள் கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே நோய், நொடி எதுவும் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
காதல் நினைவுகள் மூலம் உடலும் உள்ளமும் உற்சாகம் அடைவது உண்மைதான் என்கின்றனர் நிபுணர்கள். பெங்களூருவில் உள்ள NIMHANS நரம்பியல் துறை பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், காதல் உணர்வுகளினால் ஒவ்வொரு நரம்பிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். மூளையில் டோபமைன் எனப்படும் ஹார்மோனை சரியான அளவில் சுரக்கச் செய்யும் இதனால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காதலினால் சுரக்கும் உற்சாக கார்மோன் மன அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோனின் அளவை கட்டுப்படுத்துகிறது.
நோய்கள் குணமடையும்
அதீத காதலும், அன்பும் கொண்ட தம்பதியர் உறவில் ஈடுபடும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்பொழுது சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது. எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. உயர்ரத்த அழுத்த நோய் குணமடைகிறது என்று 229 தம்பதியரிடையே மேற்கொண்ட ஆய்வில் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலும் உள்ளமும் பொலிவாகும்
காதலோடு இணைந்த உறவு மூலம் உடலின் ரத்த ஓட்டம் சீரடைகிறது. இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, செக்ஸ் மூலம் ஆஸ்ட்ரோஜன் – புரோஜெஸ்ட்ரோன் ஹார்டோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன. சருமம் பொலிவடைகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து காணமல் போவதால் உடலும் அழகாகிறது என்று நிரூபித்துள்ளார்