Home உறவு-காதல் ஆண்கள் காதலித்தால் எப்படி வெளிபடுதுவார்கள் தெரியுமா?

ஆண்கள் காதலித்தால் எப்படி வெளிபடுதுவார்கள் தெரியுமா?

185

காதல் உறவு:ஒரு பொண்ணு உங்கள காதலிக்கிறத எத வெச்சு கண்டுபிடிக்கலாம்.. ஒரு பையன் காதலிக்கிறான்னு பொண்ணுக எத வெச்செல்லாம் கண்டு பிடிப்பாங்க… இப்படி காதல தெரிஞ்சக்க அறிகுறி, வெளிப்பாடுன்னு எத்தனையோ இருக்கு.

ஆனா, தான் காதலிக்கிற பொண்ணுகிட்ட பையன் எப்படி நடந்துக்குவான் / நடந்துக்கணும்… எது உண்மையிலேயே காதல்னு தெரிஞ்சுக்குறது தான் ரொம்பவே கஷ்டம். ஏன்னா.. இங்க நிறையா பேர் சும்மா பார்த்ததும் ஹார்மோன் கொஞ்சம் துள்ளி குதிச்சாலும் காதல்னு நெனச்சுக்குறாங்க.

காதலுக்கும் ஹார்மோனுக்கும் சம்மந்தம் இருக்குதான். ஆனால், ஹார்மோன்கள் மட்டுமே காதலாகிட முடியாது. இதோ! உண்மையா நேசிக்கிற பொண்ணுக்கிட்ட மட்டும் பசங்க இந்த ஏழு விஷயத்த வெளிப்படுத்துவாங்க.

வீக்னஸ்! தான் விரும்பும் பெண் முன், எந்தவொரு ஆணாக இருந்தாலும், தன்னை ஒரு வீரனாக, தைரியசாலியாக தான் காண்பித்துக் கொள்வான். விரும்பும் பெண் முன் தன் வீக்னஸ் தெரிந்துவிட கூடாது, அது அவமானமாக கருதுவான் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், உண்மை என்னவெனில், தான் உண்மையாக நேசிக்கும் பெண் முன் / பெண்ணிடம் தனது வீக்னஸ் என்ன என்பதை வெளிப்படுத்திவிடுவான் அந்த ஆண். தங்கள் அச்சம், எதன் மீதெல்லாம் எங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு இருக்கிறது என்பதை நேசிக்கும் ஆண் வெளிப்படுத்திவிடுவான்.

சண்டை! யார் இருவர் (ஆண் / பெண்) அதிகமாக சண்டையிட்டு கொள்கிறார்களோ, அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். மோதல் காதலில் சேரும் என்றெல்லாம் வாய்க்கு வக்கணையாக பேசுவார்கள். இவர்கள் சண்டையிட்டு கொண்டு நாள். வார, மாதக் கணக்கில் கூட பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள் என்று கூறுவார்கள். ஆனால், உண்மை என்னவெனில், கோபமெல்லாம் வெளிப்படும் தான். ஆனால், அந்த கோபத்தில் துளி அளவு கூட வன்மமோ, வக்கிரமோ இருக்காது. ஆபாசமாக திட்டுவது இருக்காது. அந்த கோபத்தின் வெளிப்பாடு அந்த பெண் மீதான அக்கறையாக இருக்கும். மேலும், நேசிக்கும் பெண் திட்டினாலுமே கூட அதை பாசம் அல்லது அக்கறையின் பேரில் அவள் திட்டுவதாக தான் எடுத்துக் கொள்வான்.

குடும்பம்! தான் காதலிக்கும் பெண் தான் தனது உலகமாக கருதுவான். நேசிக்கும் பெண் உலகமாகவே இருந்தாலும் கூட, ஆணுக்கு அவன் குடும்பம் மட்டும் தான் ஒரே குடும்பம். திருமணமாகி வரும் பெண்களுக்கு மட்டும் தான் இரண்டு குடும்பங்கள் என்ற வேறுபாடு இருப்பதாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையில்… தான் நேசிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவளது குடும்பத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக தனது குடும்பமாக பாவிக்க துவங்கிவிடுவான். ஒரு கட்டத்தில் உன் குடும்பம், என் குடும்பம் என்பது போய், ஒரே குடும்பமாக கருத துவங்கிவிடுவான்.

வெற்றி! பெரும்பாலான மக்கள், வெற்றி உறவில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் என்று கருதுகிறார்கள். சில சமயங்களில் துணையின் வெற்றியால் ஒருவர் தன்னை மீறி வளர்வதாக கருதுவார்கள். இதனால், உறவில் வேண்டாத ஈகோ பிறக்கும் என்று கருதுகிறார்கள். தான் நேசிக்கும் பெண் வெற்றிபெறுவதை, தானே வெற்றி பெறுவதாக கருதுவான் ஆண். ஒருவேளை, நேசிக்கும் பெண் / மனைவியின் வெற்றி ஈகோ அல்லது பொறாமையை அளிக்கிறது எனில் அவர்கள் உண்மையாக காதலிக்கவில்லை என்று அர்த்தம்.

கவனம்! தான் நேசிக்கும் பெண்ணுக்காக எதை வேண்டுமானால் செய்வான், விட்டுக்கொடுப்பான் என்பார்கள். ஆம்! விட்டுக்கொடுப்பான் என்பதை தாண்டி தான் விரும்பும் பெண்ணின் எதிர்பார்ப்பு, ஆசைகளை மெய்ப்பிக்க உதவுவான், அவளை அதை சார்ந்து ஊக்கப்படுத்துவான்… அவள்வசம் அந்த கனவுகள் அடைய எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதே உண்மை. ஒருபோதும் நிறைய செய்துவிட்டோம் என்ற உணர்வு வெளிப்படாது.

முக்கியம்! காதலிக்கும் ஆணுக்கு அவனது காதலி தான் எல்லாவற்றுக்கும் மேல் என்பார்கள். ஆம், வாழ்க்கை என்பதே நாம் எதற்கு, யாருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை வைத்து தான் இருக்கிறது. நாம் எதற்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கிறோம், எதை தவிர்க்கிறோம் என்பது நம் வாழ்வில் நடக்கும் செயல்களுக்கு காரணிகளாக இருக்கின்றன. உண்மையாக நேசிக்கும் ஒரு ஆண், தான் எடுக்கும் முடிவுகள், தான் அளிக்கும் முக்கியத்துவம் தன் வாழ்க்கை மட்டுமின்றி, தான் நேசிக்கும் பெண்ணின் வாழ்க்கையிலும் எத்தக்கைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்து தான் முடிவு செய்வான்.

மகிழ்ச்சி! மகிழ்ச்சி.. அது தானே அனைவரும் வேண்டும் முதல் விஷயம். நாம் செய்யும் வேலை, நேசிக்கும் நபர்கள், சம்பாதிக்கும் பணம், வாங்கும் பொருள் அனைத்துமே நமது மற்றும் நம்மை சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சிக்காக தானே. ஆனால், காதலில் அவளது மகிழ்ச்சி தான் இவனது மகிழ்ச்சியாக அமையும்.