Home உறவு-காதல் காதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதின் அறிகுறிகள்!

காதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதின் அறிகுறிகள்!

90

Unhappy young couple having an argument. Isolated on white.
காதல் உறவுகள்:காதலில் பெண்கள் தங்கள் துணை மீது பேரார்வம் கொண்டிருப்பார்கள். இது சில சமயங்களில் சந்தேகப்படுகிறார், வீண் சண்டையிடுகிறார், நம்பிக்கை இல்லை அவளுக்கு, சுதந்திரத்தை பறிக்கிறார் போன்ற எண்ணங்களை உண்டாக்கலாம். ஆனால், இது 50:50 தான்.

இதனால் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்கிறார், சந்தேகப்படுகிறார் என்றும் சொல்ல முடியும். சில சமயங்களில் அது அவர்களது முதிர்ச்சியின்மை, குழந்தைத்தனத்தையும் கூட வெளிக்காட்டலாம். இரண்டில் உங்கள் காதலி எந்த வகையை சேர்ந்தவர் என்பதை நீங்கள் தான் கண்டறிய வேண்டும்.

1) அவர் உங்களுடன் இருக்கும் போது நீங்கள் வேறு பெண்ணுடன் பேசும் போது அசௌகரியமாக உணர்வது.

2) உங்களை தனிமையில் விட மறுப்பது. நீங்கள் எங்கு சென்றாலும், தானும் உன்னுடன் வருகிறேன் என்று கூறுவது.

3) உங்கள் முகநூல் முகப்பு படத்தை யார் யாரெல்லாம் லைக் செய்துள்ளனர், மற்ற பெண்கள் என்ன கமெண்ட் செய்துள்ளனர் என வேவு பார்ப்பது.

4) அவர் உடன் இருக்கும் போது மட்டுமில்லாமல், அவர் கால் செய்யும் போது நீங்கள் பிஸியாக இருந்தாலும் கூட, யாருடன் பேசினீர்கள், எதற்காக என பேரார்வம் கொண்டு கேட்பார்கள்.

5) காரணமே இன்றி சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சண்டையிடுவார்கள். இதனால், உறவில் சந்தேகம் வலுக்க ஆரம்பிக்கும்.

6) முதல் ரிங்கில் கால் அட்டன்ட் செய்யாமல் போனாலோ, குறுஞ்செய்திக்கு உடனே ரிப்ளை செய்யாமல் போனாலோ யாருடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாய் என கேட்பது.

7) நீங்கள் இல்லாத போது உங்கள் மொபிலை எடுத்து உளவுத்துறை வேலை பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடுவது.