பார்க்காமேலே காதல், கடிதத்தில் காதல், தொலைபேசியில் காதல், ஏலியன் காதல், ரோபாட் காதல், ஈசல் காதல் என காதலில் பல பரிமாணம் நாம் கண்டிருப்போம். இது போக உண்மை காதல், போலி காதல், கள்ள காதல் என பல வகைகள் இருப்பது வேறு கதை. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை கையாண்டு ஒரு பெண், இல்லாத ஒரு காதலை சமூக தளத்தின் மூலம் அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
யார் இவர்? இந்த பெண்மணியின் பெயர் ஜில் ஷார்ப். இவர் ஒரு மனநல மருத்துவ துறையில் பணிபுரியும் நபர். ஆனால்,இதை படித்த பிறகு, இவருக்கு ஒரு மனநல சிறப்பு நிபுணர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும்.
சமூக தளத்தில் ஃபாலே… கிரகாம் மேக்குயேட் எனும் நபரை ஜில் சமூக தளத்தில் ஃபாலோ செய்து வந்துள்ளார். சும்மா கிரகாமின் அன்றாக பழக்கங்கள் அல்லது படங்களை பார்க்க இவர் ஃபாலோ செய்யவில்லை. இங்கு தான் ஜில் பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளார்
மார்பிங்! இது மட்டுமில்லாமல், கிரகாம் மற்றும் ஜில் ஒன்றாக இருப்பது போல படங்களை உருவாக்கி தாங்கள் இருவரும் காதலர்கள் என்பது போல போட்டோ எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளார் ஜில்.
வேற லெவல்! அதில் கிரகாம் தன்னை ராணி போல பார்த்துக் கொள்கிறார் என பல பொய்களை தட்டிவிட்டு சமூக தளத்தில் ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார் ஜில்.
நான்கு வருடங்கள்! கிரகாம் அவரது காதலியுடன் சென்ற இடத்திற்கு சென்று, தான் தனியாக புகைப்படம் எடுத்து, இருவரும் ஒன்றாக அங்கு சுற்றுலா சென்றது போல அனைவரையும் நம்பவைத்துள்ளார் ஜில்.
கிரகாமின் உண்மை காதலி! ஒரு கட்டத்தில் இந்த விஷயம் பரவ, கிரகாமின் உண்மை காதலி அறிந்து, உண்மையை வெளிக்கொண்டு வர செய்தார். ஜில், வேறு பெண்ணின் படத்தை எடுத்து, தனது முகத்தை மார்பிங் செய்தும் சில லீலைகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.