காதல் மனைவி:அன்பு செலுத்துவது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் அளவுக்கு அதிகமான அன்பு பிரச்னையை தோற்றுவிக்கும்.
இது குறிப்பாக கணவன் மனைவி உறவில் மிகவும் பொருத்தமாக இருக்கும். கண்மூடித்தனமான உங்கள் துணைவரை அன்பு செலுத்தும்போது நீங்கள் நீங்களாக இருக்கத் தவறுகிறீர்கள். ஆகவே எல்லாவற்றிலும் ஒரு கவனம் மற்றும் கட்டுப்பாடு இருப்பது அவசியம்.
காதலில் தோல்வி காதலில் பலர் துரதிஷ்டவசமாக தோல்வியை சந்திக்கின்றனர். உண்மையிலேயே இந்த துரதிர்ஷ்டம் தானாக இவர்கள் வாழ்க்கையில் வருகிறதா? அல்லது தவிர்க்க முடியததாகிறதா அல்லது நீங்களாக சென்று அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது தான் கேள்வி.
துணை தேர்வு உங்கள் துணைவரை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இல்லாமல் இருந்தாலும் உங்கள் காதல் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் உண்டாகலாம். அதாவது, நீங்கள் சில நேரங்களில் ஒரு முடிவிற்கே வராமல் இருக்கலாம்.
புரபோஷல் முதன் முறையாக ஒருவர் உங்களிடம் வந்து காதலை சொன்னால், அவரை மறுக்க உங்களுக்கு தோன்றாது. அவர் உங்களிடம் அன்பாக வெளிப்படையாக இருப்பது போல் உங்களுக்கு தோன்றும். இந்த எண்ணம் உங்களுக்கு சுயமரியாதை இல்லை என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். உங்களிடம் காதலை சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும். அவருடன் உறவில் இணைய உங்களுக்கு முழு சம்மதம் உள்ளதா என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் துணைவராக அவர் வருவதற்கான தகுதி அவரிடம் உள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இதில் எதாவது ஒன்று இல்லாவிட்டால் கூட தைரியமாக அவருக்கு நோ சொலல்லாம்.
சுய மரியாதை அவர் உங்களை கண்காணித்தது போல், நீங்களும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சுய மரியாதை கொண்ட ஒருவருக்கு எந்த நாளும் துரதிர்ஷ்டம் வராது. உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும் தைரியம் தானாக உருவாகும். வாழ்க்கையில் ஒரு துணை என்பது அவசியம் தேவை. காதலில் துரதிர்ஷ்டம் என்பது வேறு வகையிலும் உண்டாகலாம். உங்கள் துணையை தேடுவதற்கான கால அவகாசத்தை நீங்கள் கொடுக்காதபோதும் இந்த நிலை உண்டாகலாம். இதனால் நீங்கள் தனியாக வாழும் நிலை உண்டாகலாம். இதுவும் ஒரு துரதிர்ஷ்ட நிலையே ஆகும். இதனால் உடனடியாக ஒரு துணையை தேட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். இதனை அதிகப்படுத்தும் வகையில் இந்த சமூகமும், சுற்றியுள்ள மக்களும் நடந்து கொள்வார்கள்.
துரதிஷ்டம் உங்கள் வாழ்க்கையில் உங்களை மதிக்காத அல்லது நீங்கள் நினைப்பதற்கு ஏற்ற வகையில் உங்களை விரும்பாத மனிதர்களை அடிக்கடி சந்திப்பதால் உங்கள் வாழ்க்கையில் காதல் காணாமல் போவது போல் உணரலாம். இந்த வகை துரதிர்ஷ்டத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டே போகலாம். உங்களைச் சார்ந்த உறவுகளில் தொடர்ந்து ஒரே விதமான பிரச்னையை நீங்கள் எதிர்கொள்ளும்போது, உண்மையில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, பிரச்சனை வெளியில் இருந்து வருவது இல்லை, உங்கள் மீது தான் தவறு உள்ளது. உறவுகளிடையே கண்மூடித்தனமாக நீங்கள் பழகுவதால் மறுபடி மறுபடி நீங்கள் அதே வலையில் சிக்கித் தவிக்கும் நிலை உண்டாகிறது.
கோபமாக பேசுதல் எல்லா நேரத்திலும் வாய் வார்த்தைகள் மூலம் உங்கள் துணை உங்களை காயப்படுத்தினால் நீங்கள் அவருடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காதலுக்கு முன்பு ஏற்படும் ஒரு கவர்ச்சியின் காரணமாக அவர் உங்கள் மீது அன்பு காட்டுவது போல் இருக்கலாம். அடுத்த சில நாட்களில் இந்த நிலை மாறலாம். இந்த மாற்றத்தை நீங்கள் கவனிக்கும்போது அவரிடம் இருந்து விலகி வருவது உங்களுக்கு நன்மை தரும். உங்களை அவர் தரக்குறைவாக பேச தொடங்கும்போதே அதற்கான எதிர்ப்பை நீங்கள் வெளிபடுத்தியாக வேண்டும். ஒரு சிலர், இத்தகைய நிலை ஏற்படும்போது, தனது துணை தன்னை காயப்படுத்தும்போது, காதல் என்ற பெயரால் எல்லாவற்றையும் மன்னித்து, மறந்து கொண்டே இருப்பதால், இதே முறையை எல்லா உறவிலும் இவர்கள் செயல்படுத்த முனைகின்றனர். உங்களுக்கு எதிராக தவறு இழைக்கப்படும்போது நீங்கள் அதனை சுட்டிக் காட்டுவது உங்கள் பொறுப்பு. சூழ்நிலையை பற்றி புரிந்து கொள்ளாமல் சில நேரம் அடுத்தவர் மீது பழி சொல்லும் நிலையும் ஏற்படலாம்.
காலம் மாற காத்திருக்கலாம் உங்கள் துணை மாறுவதற்கான அவகாசம் தரலாம். ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை என்று தொடர்ந்து அவகாசம் கொடுங்கள். உங்கள் துணை மேல் நீங்கள் கொண்டிருக்கும் காதல் அவருடைய குணநலன் மற்றும் செயல்களை மாற்றலாம். ஆனால் ஒரு காலகட்டத்தில் அது மாறாது என்ற முடிவிற்கும் நீங்கள் வர நேரலாம்
அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நீங்கள் எல்லாவற்றிலும் சரியாக இருப்பது போல், உங்கள் கணவர் , உங்களில் சரி பாதியான அவரும் எல்லா வற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அதற்காக அவரிடம் போராடுகிறீர்கள்.
கைமீற விடுவது முதன்முறை உங்கள் துணை உங்களிடம் அத்துமீறி பேசும்போது அது உங்களை பாதிக்காது. ஆனால் அதையே ஒவ்வொருமுறையும் தொடரும்போது உங்களால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே, முதன்முறை அத்துமீறி பேசும்போது அல்லது நடக்கும்போது அதனை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அது தொடர்ந்து நடைபெறும் சூழல் உருவாகும்.
மகிழ்ச்சி ஒரு துணை நம்மைத் தேடி வரும்போது சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. ஒரு ஜோடி இணைவதால் இரு குடும்பங்கள் இணைகிறது. இது உண்மை என்றால் பின்பு ஏன் பல ஜோடிகள் சந்தோஷமாக இருப்பதில்லை.? திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு பிறகு உங்கள் வயது அதிகமாக இருக்கிறது அல்லது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது போன்ற தேவையற்ற கேள்விகளுக்கு இடம் வேண்டாம். பல கேள்விகளால் உங்கள் காதல் வாழ்க்கையில் வலி அதிகமாகும். ஆகவே உங்கள் துணையை நன்கு புரிந்து கொண்டு அவருடன் வாழத் தொடங்குங்கள். உங்கள் துணைவருக்காக கண்மூடித்தனமான அன்பை பொழிய வேண்டாம். சலிப்பையும் காட்ட வேண்டாம். ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு தன்னம்பிக்கையோடு வாழுங்கள்.