Home உறவு-காதல் காதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா ?

காதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா ?

36

Les amoureux de Marine Drive… Gli innamorati di Marine Drive
எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும் தானே…. அதை இன்னொரு வகையில் குறிப்பிட வேண்டும் என்றால் உல்லாச வாழ்க்கை என்று சொல்லலாம். அதைச் செய்வதற்கான எந்த பிரத்யோக காரணமும் இருக்காது.

பொழுது போக்கிற்காக செய்கிற ஒரு விஷயம் என்று கூட அதனை சொல்லலாம். தமிழில் சொல்லும் போது மிகச் சாதரணமாக பொழுது போக்கும் ஓர் விஷயம் தானே என்று நாம் கடந்து சென்று விட முடியும். இதே விஷயத்தை அப்படியே பிசகாமல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துப் பாருங்களேன்… உங்களுக்கே லேசாக கோபம் எட்டிப்பார்க்கும்.

ஃப்ளர்ட்டிங் : ஃப்ளர்ட்டா??? ஆர் யூ ஃப்ளர்டிங் மீ என்று உங்கள் இணையரிடம் கேட்டுச் சண்டையிட்டது எல்லாம் நினைவுக்கு வருகிறதா? தொடர்ந்து வாசியுங்கள்….

ஃப்ளர்டிங் நாம் பல நேரங்களில் கடந்து வந்திருப்போம் . பல நேரங்களை அதனை ஃப்ளர்ட் என்று தெரியாமலே கூட கடந்திருப்போம். நமக்கு மட்டுமே ஃப்ளர்ட்டிங் செய்யப்படுகிறது என்று நினைக்காதீர்கள் நாமும் செய்திருப்போம். சில நேரங்களில் உங்களை அறியாமல் கூட செய்திருக்கலாம்.

இயற்கை : ஃப்ளர்டிங் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் இயற்கையானது. இது ஒரு ரிலேஷன்ஷிப்பிற்குள் நம்மை இட்டுச் செல்லாது. வெறும் டைம் பாஸ் என்பது போல அந்த நேரத்திற்கான கிளர்சிக்கு ஓர் வடிகாலாக இந்த ஃப்ளர்டிங் இருக்கும்.

இது பிறரின் மனதை புண்படுத்தாத வரையில் தவறில்லை. எப்போது இது எல்லை மீறிச் செல்லும் என்பதை தொடர்ந்து உங்களால் கண்காணித்துக் கொண்டேயிருக்க முடியாது என்பது தான் இதிலிருக்கும் மிகப்பெரிய சிக்கல்.

பல விதங்களில் : ஃப்ளர்ட் என்பது, வெறும் உடல் ரீதியாக, பேசுவதன் மூலம், அல்லது ஏதேனும் செய்கைகள் மூலமாக மட்டுமே நடைபெறும் என்பதல்ல அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒருவரை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருப்பது கூட ஒரு வகை ஃப்ளர்ட்டிங் தான். சில நேரங்களில் இதனை உங்களை அறியாமலும் செய்து கொண்டு இருப்பீர்கள்.

நீங்களா அது? : ஃப்ளர்ட் செய்யும் போது சில நேரங்களில் சப் கான்சியஸ் மைண்டில் இருப்பதால் உங்களை அறியாமல் சில செய்கைகளை செய்வீர்கள். சில நேரங்களில் இது எதிரில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம்.

விலங்குகள் : இந்த ஃப்ளர்டிங் என்பதை ஒரு வகையில் கவர்தல் என்று கூட சொல்லலாம். எதிர் பாலினத்தை தன்னை நோக்கி திரும்பி பார்க்கச் செய்கிற செயல்கள், அவர்களின் கவனத்தை ஆட்கொள்கிற விஷயங்களை நாம் செய்வதும் ஃப்ளர்டிங் தான். இது விலங்குகளிடத்தில் கூட காணப்படுகிறது. பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில் தோகை விரித்தாடி கவர்ந்திழுக்கிறதே அதுப் போலத்தான்…

சில சிக்னல்கள் : ப்ளர்டிங் ஆளுக்கு தகுந்தாற் போல, அவரது அதாவது அந்த தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இது அமைந்திடும். ஆனாலும் சில பொதுவான ஃப்ளர்டிங் சிக்னல்கள் என்னென்ன தெரியுமா? சிரிப்பது, கண் அடிப்பது, முடியை பிடித்து நொண்டுவது, உதட்டை சுழற்றுவது, உதட்டினை நாக்கால் தடவுவது ஆகியவை பொதுவானதாக இருக்கிறது.

மொழித் தேவையில்லை : ஃப்ளர்ட் நீங்கள் பேசித்தான் அல்லது ஏதேனும் ஓர் மொழி மூலமாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதல்ல இது சப்கான்சியஸ் மைண்டில் இருப்பதால் உங்களது செயல்களே அவர்களுக்கு உணர்த்தும் என்பதை மறக்க வேண்டாம்.

ஃப்ளர்டிங் டிப்ஸ் 1 : அவரை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவரை அடைந்தே தீருவேன் என்று நினைப்பதை முதலில் கைவிடுங்கள். முதலில் உங்கள் மீதான நல்ல அபிப்ராயத்தை உண்டாக்குங்கள். நீங்களாக வழியச் சென்று அவரிடத்தில் பேசுவது எல்லாம் பழைய கதை…. இன்றைய யுகத்தினருக்கு ஏற்ப உங்களுக்கு வந்திருக்கிறதே ஆசை அதே போல அவர் மனதிலும் ஆசையை உண்டாக்க வேண்டும்.

டிப்ஸ் 2 : திடிரென்று ஒரு பெண்ணின் மனதில் ஆசையை உண்டாக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். இதனை நீங்கள் கவனமாக கையாள்வது உங்களிடத்தில் தான் இருக்கிறது. அவருக்கு எதில் விருப்பம், எதில் நாட்டம் அதிகம் என்ற தகவல்களை முதலில் திரட்டுங்கள்.

டிப்ஸ் 3 : வெறும் பார்வையினால் கூட ஃப்ளர்ட் செய்ய முடியும், அதாவது உங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க முடியும். முதன் முறையாக பார்க்கும் போதே ஏதோ கொள்ளைக்கார கும்பலிலிருந்து ஒருவன் பார்ப்பது போன்றோ வேண்டாமே….

டிப்ஸ் 4 : அட்மையரிங் லுக் போல உங்கள் பார்வை இருக்கட்டும்.தொடர்ந்து அவரை பாருங்கள்…. இது ரொமாண்டிக் லுக்காக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்குப் பிடித்த ஒரு பொருளை வியந்து பார்க்கிறீர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது, அவருக்கோ அல்லது அவரின் உடனிருக்கும் நண்பர்களுக்கோ தெரிந்தால் கூடுதல் சிறப்பு. இங்கே பல காதல்களை ஊட்டி வளர்ப்பது உடனிருக்கும் நண்பர்கள் தானே….

டிப்ஸ் 5 : ஒரு கட்டத்தில் இருவரது பார்வையும் சந்திக்கும். அப்போதும் அவரை முறைத்துக் கொண்டே இருக்காமல் லேசாக சிரித்திடுங்கள். சின்ன புன்னகை போதும். அது அரைவிநாடிக்கு அதிகமாக இருக்க வேண்டாம். பின்னர் சில நிமிடங்களுக்கு பார்ப்பதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வேறு வேலைகளில் மூழ்கியிருப்பது போல காட்டிக் கொள்ளுங்கள். உங்களின் திடீர் புன்னகை பிறகு அந்த தவிர்க்கும் தருணம் ஆகியவை உங்கள் இணையின் மனதில் பல கேள்விகளை உருவாக்கிடும். இது போதாதா என்ன?

டிப்ஸ் 6 : இருவரின் சந்திப்பு சகஜமானதும் உடனேயே போன் நம்பர் கேட்டு வாட்சப்பில் உங்களின் அன்றாட தினசரிகளை ஒப்பிக்கும் வேலையை தயவு செய்து செய்யாதீர்கள். சில காலங்கள் இந்த ஃப்ளர்டிங்கிலேயே தொடரட்டும். அவ்வப்போது பார்த்து புன்னகை மட்டும் செய்திடுங்கள்.

டிப்ஸ் 7 : இதன் அடுத்த கட்டமாக பாராட்டுங்கள். வழக்கம் அழகாய் இருக்கிறாய் என்று பொதுவாக சொல்லாமல் ஏதேனும் சின்ன மாற்றம் செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று நிறுத்துங்கள். உதாரணத்திற்கு கண்மையிட்டால் அழகாக இருக்கும், மீசையை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்தால் அழகாக இருக்கும். ஃப்ரென்ச் பியர்ட் வைத்தால் செம்ம மாஸ் என்று சொல்லுங்கள். இந்த மாற்றங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்பட்டால் கங்கிராட்ஸ் பாஸ்…..