சூடான செய்திகள்:காதல் எப்படி வரும், எங்கே வரும், யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், காலம் கூடிவரும் போது காதலும் கைகொடுக்கும். ஆனால் எதனால் நேர்ந்தது என்பது தான் காதலில் ஆணி வேராக இருக்கும் இதோ சில பெண்கள் தங்கள் காதலரிடம் ஈர்த்த முதல் முக்கிய அம்சங்களை பகிர்ந்துகொள்கின்றனர்,
காதலனின் குரல் தான் முதன் முதலில் தன்னை வெகுவாக ஈர்த்தது என்கிறார் ஒரு பெண். அப்படி ஒரு குரலை அதற்கு முன் கேட்டதே இல்லையாம். தற்போது வரை அதன் ஈர்ப்பும், தாக்கமும் தன்னை பாதித்து வருவதாகக் கூறுகிறார். சிரிக்கவே தயங்குபவர்கள் மத்தியில் சிரிப்பு தான் காதலனின் அழகு என்கிறார் மற்றொரு பெண். அவனது சிரிப்பில் ஒரு ஆண்மை அழகும் அதிகமாக வெளிப்படும் என்கிறார்.
எதையும் சீரியசாக்காமல் எளிமையாக எடுத்துக் கொண்டு சிரித்த முகத்துடன் நகர்ந்துவிடும் பழக்கம் தான் காதலனிடம் தன்னை ஈர்த்தது என்கிறார் இன்னொரு பெண். அவனுடன் வாழ்வது வாழ்க்கையை முழுமையாக கொண்டாடுவதற்கு சமம் என்கிறார்.
காதலனின் நகைச்சுவை உணர்வும், அதனைக் கொண்டு அவன் மற்றவர்களை மகிழ்விக்கும் விதமும் தான் ஒரு காதலியை கவர்ந்திருக்கிறது. காதலனின் உயரம் மற்றொரு காதலியைக் கவர்ந்திருக்கிறது.
ஒரு செயலி மூலம் காதலனிடம் அறிமுகமான பெண் அவனிடம் தன்னைப் பற்றிய பொய்த் தகவல்களையே பகிர்ந்து வந்த நிலையில் அவன் தன்னிடம் வெள்ளந்தியாகவும், உண்மையாகவும் இருந்ததால் கவரப்பட்டு, அவனிடம் மன்னிப்பு கேட்டு தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூறி காதலித்து வருகிறார்.
ஷேர் டாக்சியில் பயணித்த ஒரு ஆண் ஒரு குலுக்கலின் போது தன்மீது வந்து விழுந்த பெண்ணின் மீது காதல் கரண்ட் பாசாகி கவிழ்ந்து விழுந்திருக்கிறார். தொடர்ந்து நான்கைந்து மாதம் அவளை பின் தொடர்ந்து காதலை ஏற்றுக் கொள்ள செய்திருக்கிறார்.
தோழியைக் காதலித்தவரை தோழிக்குப் பிடிக்காத நிலையில் தோழியிடம் அவரது கண்ணியமான அணுகுமுறைகளைக் கண்டு ஒருதலையாகக் காதலித்த பெண் தற்போது தனது காதலை ஏற்கச் செய்து அந்த ஆணைக் காதலித்து வ்ருகிறார். ஒரு ஆண் ஸ்டைல் அல்லது கெட்டப் மாற்றங்கள் என எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததே ஒரு பெண்ணைக் கவர்ந்து காதலுக்கு வழிவகுத்திருக்கிறது
காதலனின் நகைச்சுவை உணர்வும், யார் மனதும் நோகாமல், யாருக்கும் கோபம் ஏற்படாத பேச்சுமே காதலனிடம் பிடித்தது என்கிறார் மற்றொரு பெண் பள்ளிக் கால நண்பர்கள் ஒரே நகரத்தில் வேலை கிடைத்தால் மீண்டும் சந்தித்தனர். ஒருமுறை பீச்சுக்கு சென்ற போது இருவரும் எதிர்காலம், ஒருவருக்கொருவர் நிறை குறைகளைப் பற்றி விவாதித்ததாகக் கூறுகின்றனர். அது காதல் மலரவும் காரணமாக இருந்ததாகக் கூறுகின்றனர்