நம் வாழ்க்கை மற்றும் குணநலன்களில் கிரகங்கள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது அனைவருக்குமே தெரியும். குறிப்பாக நமது குணாதிசயங்களைப் பற்றி ஒவ்வொருவரது ராசிகளும் அப்படியே தெளிவாக சொல்லும். ஏன், நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூட கிரகங்களைக் கொண்டு ஜோதிடர்கள் கணித்துக் கூறுவார்கள்.
தற்போது பெரும்பாலான தம்பதிகளுக்குள் வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் அதிகரித்து வருகிறது. இது அப்படியே நீடித்தால், பின் விரிசல் ஏற்பட்டு, நாளடைவில் விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடும்.
ஜோதிடத்தில், உறவுகள் சந்தோஷமாகவும், சிறப்பாகவும் இருக்க ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். அதைத் தெரிந்து புரிந்து நடந்து கொண்டால், நிச்சயம் திருமணம் அல்லது காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேஷம்
உங்கள் துணை மேஷ ராசியா? பொதுவாக மேஷ ராசிக்கார்கள் எப்போதும் தங்களது துணைக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதேப் போல் தனக்கு வரும் துணையும் தன்னை அப்படியே நினைத்து நடத்த வேண்டுமென்றும் நினைப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள், எப்போதும் எதிலும் சிறப்பாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். மேலும் இவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது சிறிதும் பிடிக்காது.
ரிஷபம்
ரிஷப ராசிக்கார்கள் உங்கள் வாழ்க்கைத் துணையா? ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள், மிகவும் உண்மையானவராக இருக்க விரும்புவார்கள். இவர்களிடம் எதையும் மறைக்காதீர்கள். இவர்கள் தன்னிடம் பழகுபவர்கள் வெளிப்படையானவராகவும், நம்பகத்தன்மையானவராகவும் இருக்கவே விரும்புவார்கள். எனவே இதைப் புரிந்து அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், தங்கள் மனதில் தோன்றுவதை தயக்கமின்றி பேசுவார்கள் மற்றும் தனக்கு வரும் துணையும் அப்படியே இருக்க விரும்புவார்கள். ஒருவேளை தம்பதியர் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, நீங்கள் உங்கள் நிலைமையை முன்பே கூறினால், அதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வர். மிதுன ராசிக்காரர்கள் சற்று சுதந்திரமாக இருக்க விரும்புவர். ஆகவே அவர்களது சுதந்திரத்தை அடக்க முயற்சிக்காதீர்கள்.
கடகம்
வேறு எந்த ஒரு ராசிக்காரரும் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அதீத ஆர்வமுடையவர்கள். இத்தகையவர்களிடம் மன்னிக்கும் குணம் அதிகம் இருக்கும்.
சிம்மம்
உங்கள் துணை சிம்ம ராசிக்காரராக இருந்தால், நீங்கள் மிகவும் பொறுமையானவராக இருக்க வேண்டும். சிம்ம ராசிக்கார்கள், தன் துணை எப்போதும் தன்னைப் பாராட்ட வேண்டுமென்று நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அசுத்தமானவர்களைக் கண்டாலே பிடிக்காது. இந்த ராசிக்காரரை வெளிப்படையாக அவமானப்படுத்திவிட்டால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் சுத்தமாக இருக்க விரும்புவார்கள். கன்னி ராசிக்காரர்களின் ஆசையை நிவர்த்தி செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை விட மனித இணைப்புக்களின் நுட்ப வேறுபாட்டை யாராலும் அறிந்திருக்க முடியாது. இந்த ராசிக்காரர்களை சமநிலை, நீதி மற்றும் அமைதியுடன் நடத்த வேண்டும். இத்தகையவர்களுக்கு கடுமையாக நடந்து கொள்வது என்பது பிடிக்காது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை ஏமாற்றி விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றுவதை அவர்கள் அறிந்தால், அதனால் உறவுகள் உடனே முறிந்துவிடும். எனவே விருச்சிக ராசிக்காரர்களை துணையாக கொண்டிருந்தால், அவர்களிடம் நேர்மையானவராகவும், ஏமாற்றும் குணம் இல்லாதவராகவும் இருங்கள். அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் மகத்தான காதலைத் தான் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின், தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் மற்றும் சந்தேகமே, அவர்களது திருமண வாழ்க்கையைப் பாழாக்கும். இத்தகைய குணம் உண்மையிலேயே உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கும். இருப்பினும் இவர்களுக்கு வரும் துணை புரிந்து கொண்டு, நடந்தால், இப்பிரச்சனை இருக்காது. மற்றபடி இவர்கள் மிகவும் அன்பானவர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள், தங்களது உணர்வுகளை மிகவும் அரிதாகவே வெளிக்காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புவார்கள் மற்றும் இதை இவர்களுக்கு துணையாக வருபவர்களும் மதித்து பாராட்ட வேண்டுமென்று நினைப்பார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு செயலையும் நன்கு சிந்தித்து, நேரம் வரும் போது செயல்படுத்துவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மனித இனத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். தனக்கு துணையாக வருபவர்கள், சுற்றுச்சுழல் மற்றும் மனித இனத்தின் மீதான பிரச்சனைகள் பற்றியோ சற்றும் கவலைக் கொள்ளாமல் இருந்தால், கடும் கோபம் கொள்வார்கள். மொத்தத்தில் பொது நலம் கொண்டவர்கள் கும்ப ராசிக்கார்கள். இத்தகையவர்களுக்கு துணையாக வருபவர்களுக்கு பொறுமை சற்று அதிகமாகவே இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தாராள மனம் படைத்தவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள். ஆனால் இதையே சாதகமாக யாரேனும் பயன்படுத்தி வரம்பு மீறி நடந்து கொண்டால், அத்தகையவர்களைப் பற்றி கவலை கொள்ளவேமாட்டார்கள். ஆனால் தனக்கு வரும் துணையே அப்படி நடந்து கொண்டால், மனமுடைத்து உறவில் நாட்டமின்றி போவார்கள்.