உடல் கட்டுபாடு:நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும் போது டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சீனி, நிறைவுற்ற கொழுப்பு அடங்கிய உணவுகள் போன்றவற்றை முடிந்த வரை தவிர்த்தல் வேண்டும்.
அதற்கு பதிலாக சரியான காய்வகைகள் குறிப்பாக தக்காளி போன்றவற்றை தினமும் சேர்த்துக் கொள்வது சிறந்தது. தக்காளியில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதுடன், நீண்ட நேரம் பசி வராமல் வயிற்றைத் திருப்திபடுத்துகின்றது.
குறைந்தளவு கலோரிகள் உள்ளதனால் உடல் ஆரோக்கியத்திற்கும், எடையைக் குறைப்பதற்குமான சிறந்த உணவாக தக்காளியைக் கருதுகின்றனர்.
தக்காளிச் சாற்றில் அதிகளவான புரோட்டின், விட்டமின், கனியுப்புக்கள் மற்றும் நார்ப் பொருட்கள் இருப்பதனால் இடையின் எடையை ஒரே மாதத்தில் குறைத்து விடும்.
உடல் எடையைக் குறைக்கும் தக்காளியின் சிறப்புக்கள் சில.
1. குறைந்த கலோரிகள் உள்ளன.
ஒரு சிறிய தக்காளியில் 16 கலோரிகள் வரையே காணப்படும். அதனால் இரண்டு தக்காளி சாப்பிட்டாலும் 50 கலோரிகளிற்குக் குறைவாகவே கிடைக்கும் இதனால் இலகுவாக் உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க முடியும்.
2. அதிகளவான நார்ப் பொருட்கள் காணப்படுகின்றது.
தக்காளியில் கரையும் மற்றும் கரையாத நார்ப் பொருட்கள் காணப்படுகின்றது. இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதிகளவான உணவினை உறிஞ்சவிடாமல் தடுப்பதுடன், நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது.
3. மெட்டபோலிசத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
தக்காளிச் சாற்றில் உள்ள சிறப்பு கொழுப்பு உணவின் மெட்டபோலிசத்தை அதிகப்படுத்துவதே. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களின் அளவு குறைவடைந்து விடும்.
4. குறைந்த கிளைசிமிக் குறியீடு உள்ளது.
கிளைசிமிக் குறியீடு என்பது குறித்த அளவு உணவு இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதே. தக்காளியில் குறைந்தளவு கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
5. அண்டிஒக்ஸிடன் செறிந்துள்ளது.
தக்காளில் உள்ள லைகோபன் எனும் அண்டிஒக்ஸிடன் ஒக்ஸிஜன் தாக்கத்தால் அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கின்றது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது.
6. வீக்கத்திற்கு எதிராக செயற்படும்.
தக்காளியில் உள்ள லைகோபன் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்து. இதனால் வீக்கத்தால் ஏற்படுத்து உடல் எடையை இலகுவாக தக்காளி சாப்பிடுவதனால் குறைத்து விடலாம்.
7. மன அழுத்தத்தை குணமாக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தினால் சாப்பிடும் அளவு அதிகரிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கச் செய்யும். தக்காளியில் உள்ள பீற்றா கரோட்டின், லைகோபன், விட்டமின் ஈ உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், இருதய நோய்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
8. நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
தக்காளி கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் எடை குறைவதுடன், இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.
உடல் எடையைக் குறைப்பதற்கு தக்காளியை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?
• தக்காளியை சாலட்களில் சேர்த்து சுவையாக உட்கொள்ளுதல்.
• தக்காளியுடன் வேறு பல காய் வகைகளையும் பயன்படுத்தி மென்பானங்களை தயாரித்தல்.
• வீட்டில் தயாரிக்கும் கறிகளில் அதிகமாக தக்காளியை சேர்த்துக் கொள்ளுதல்.
• சூடாக்கப்பட்ட சிக்கன், மீன் உடன் சேர்த்து தக்காளியையும் உட்கொள்ளுதல்.
• தக்காளியுடன் எலுமிச்சைச் சாறை சேர்த்து சிற்றுணவாக சாப்பிடுதல்.
• தக்காளி சூப் செய்து மதிய மற்றும் இரவு உணவிற்கு எடுத்துக் கொள்ளுதல்.
தக்காளி, வெள்ளரிக்காய், சிக்கன் சேர்த்து சுவையான உணவை தயாரித்து சாப்பிடுதல்