உடல் கட்டுப்பாடு:உடல் எடையை கணிசமாக குறைக்க விரும்புகிறவர்கள் 16:8 என்ற புதிய டயட் முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் என்ற பல்கலைக்கழகம் உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடை குறைப்பது குறித்த ஆய்வை ஒன்றை மேற்கொண்டது.
இதற்காக எடை அதிகம் உள்ள 23 பேரை, நேரத்துக்கு தகுந்தவாறு கட்டுப்பாடான உணவை உட்கொள்ள செய்ய வைத்து ஆய்வை உட்படுத்தியது. அதாவது ஒரு நாளில் சில மணி நேரம் எதுவும் உண்ணாமலும், மீத நேரத்தில் வேண்டியதை உட்கொள்ளவும் செய்தது.
இந்நிலையில், 45 வயதை சராசரியாக கணக்கிட்டு, பிம்ஐ என்று கூறப்படும் உடல் நிறை குறியீடு 35 வரை உள்ள பருமானான நபர்களை தினமும் காலை 10 முதல் மாலை 6 வரை அவர்கள் விருப்பிய உணவுகளை, வேண்டிய அளவிற்கு உண்ண வைக்கப்பட்டனர்.
இதற்கு அடுத்து வரும் மீதமுள்ள 16 மணி நேரத்திற்கு அவர்கள் வெறும் தண்ணீர் அல்லது கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே குடிக்க வைக்ப்பட்டனர். இதனை அவர்கள் 12 வாரங்கள் வரை பின்பற்ற செய்தனர்.
இதில் அவர்களது ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் அவர்களி எடையிலும் கண்கூடாக மாற்றம் தெரிந்தது. மேலும் உடலிலுள்ள மற்ற தாதுக்களும் கட்டுப்பாடில் இருந்தது.
இதையடுத்து, 16 மணி நேரம் உண்ணா விரதம், 8 நேரம் உண்ணும் விரதம் என்ற இம்முறை டயட் எடை குறைப்புக்கான மற்றொரு முறையாக பின்பற்றலாம் என ஆய்வின் அறிக்கைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.