வயதாவது அனைத்து பெண்களையும் பயம்கொள்ள செய்யும் ஒன்றாகும். இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், இது தவிர்க்கமுடியாதது. எனினும், அதை தாமதப்படுத்த முடியும் அதுவும் வீட்டிலிருந்தபடியே. வயதாகும் அறிகுறிகளை போக்கும் இந்த எளிய 9 குறிப்புகளை பாருங்கள்.
1. தேன்
தேன் என்பது வயதான சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிபாக்டீரியா மற்றும் ஈரப்பதம் நிறைந்த பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் இயற்கை சர்க்கரை (பாலிசாக்கரைடுகள்) தோல் செல் செயல்பாடு அதிகரிக்கும் நொதிகளை கொண்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. முகத்தை கழுவிவிட்டு சுத்தமான தேனை 20 நிமிடங்கள் முகத்தில் பூசி முகசுருக்கங்களுக்கு விடைகொடுங்கள்.
2. எலுமிச்சைச்சாறு
எலுமிச்சைச்சாறு கரும்புள்ளிகளை குறைத்து வயதை குறைவாக காட்டும் பண்புகள் கொண்டது. மேலும், வெறும்வயிற்றில் தண்ணீருடன் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பதால் உடலில் நச்சுத்தன்மை வெளியேறுவதோடு சருமமும் பொலிவடையும்.
3. பன்னீர்
பன்னீரில் சருமத்தை இறுக்கும் பண்புகள் உள்ளது. மேலும், சருமத்தை ஆரோக்கியமாக ஒளிர செய்யும். இதை சந்தன பொடியுடன் கலந்து பயன்படுத்தும்போது சரும கரும்புள்ளிகளை குறைப்பதோடு சரும நிறத்தையும் பராமரிக்க உதவும்.
4. அத்தியாவசிய எண்ணெய்கள்
வாதுமை எண்ணெய் 8 துளி, சந்தன எண்ணெய் 4 துளி, செவ்வந்திப்பூ எண்ணெய் 6 துளி மற்றும் கேரட் விதை எண்ணெய் 5 துளிகள் ஆகியவற்றை கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் கருவளையங்கள், கருப்பான பகுதிகளின் மீது தடவிக்கொண்டு தூங்குங்கள்.
5. ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்யை ஒரு சில துளிகள் எடுத்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதை செய்து, இரவு முழுவதும் அப்படியே இருக்கும்படி விட்டுவிடுங்கள். இது சருமத்தை மென்மையாக்குவதோடு சுருக்கங்களையும் குறைக்கும்.
6. அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழம் பைட்டோகெமிக்கல்களையும், நுண்ணூட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது வயதாவதற்கான முதல் அறிகுறிகளை அகற்ற உதவுகிறது. முகத்தை சுத்தம் செய்து அன்னாசி பழ துண்டுகளை 5 நிமிடங்கள் முகத்தில் நன்கு தேய்க்கவும், வாரத்திற்கு 2-3 முறை இதனை செய்தால் சருமம் பாதுகாக்கப்படுவதோடு பொலிவடையும்.
7. ஸ்ட்ராபெரி பேக்
இது ஒரு மிக பழமையான பழமாக இருப்பதுடன், ஸ்ட்ராபெரி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்கிறது. சில ஸ்ட்ராபெரி பழங்களை மசித்து வாரம் இருமுறை முகம் முழுவதும் தடவினால் அற்புதமான இளமையான சருமத்தை பெறலாம்.
8. உருளைக்கிழங்கு சாறு பேக்
உருளைக்கிழங்கு வைட்டமின் சி நிறைந்த பொருளாக உள்ளது. இது கொலாஜனை மீட்க உதவுகிறது மற்றும் தோல் நெகிழ்ச்சித் தன்மையிலிருந்து பராமரிக்கிறது. உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி சாறு எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு பருத்தி துணியை வைத்து முகம் மற்றும் கழுத்தை சுற்றி நன்கு தடவுங்கள், வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
9. முட்டை பேக்
முட்டையின் வெள்ளைக்கருவில், துத்தநாகம், புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. அரை தேக்கரண்டி பால் கிரீம், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
மறந்துவிடாதீர்கள்! சிகரெட் குடிப்பதை நிறுத்துங்கள், மது அருந்துவதை குறைத்து கொள்ளுங்கள், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதில் உறுதியாய் இருங்கள். நிறைய பச்சை காய்கறிகள், பழங்களை எடுத்து கொள்ளுங்கள், அதிகளவு நீர் அருந்துங்கள், உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள் மேலும் தூங்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்யுங்கள், இளமையான சருமத்தை பெறுங்கள்.