Home ஆரோக்கியம் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா?

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா?

28

captureஇந்தக் காலத்தில் எல்லோரும் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் நிலையே உள்ளது. தகவல் தொடர்பு வசதிகள், போக்குவரத்து, வேலை செய்யும் இடத்தின் சௌகரியங்கள், தொழில்நுட்பங்கள் போன்ற பல அம்சங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், உடல் உழைப்பின் அவசியம் பெருமளவு குறைந்துவிட்டது. இத்தகைய முன்னேற்றங்கள் மனித வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படக் காரணமானதுடன், பல்வேறு தீய விளைவுகளுக்கும் காரணமாகின்றன.
நீண்ட நேரம் உட்கார்ந்த்திருப்பதால் ஏற்படும் தீங்குகள்
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது என்பது, கீழ்க்கண்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை மிகவும் அதிகப்படுத்தக் காரணமாக இருக்கலாம் என்று உலகளவில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன:

இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்
வகை 2 நீரிழிவுநோய்
புற்றுநோய்
இறப்புவீதம் அதிகரித்தல்
பெருமளவு எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், 45க்கும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபர்களுக்கு ஏற்படும் மரணங்களில் 7% மரணங்களுக்கு, அவர்கள் உட்கார்ந்திருக்கும் நேரம் ஒரு வகையில் காரணமாக இருப்பதாகத் தெரியவந்தது.
பின்வரும் காரணங்களுக்காக அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால், குறைந்த வயதிலேயே மரணம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்று கூறினால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்! அந்தக் காரணங்கள் கீழே:
டிவி பார்ப்பது
வேலை செய்யும் இடத்தில்
பயணத்தின்போது
கணினிகள் மற்றும் கேமிங் சாதனங்களைப் பயன்படுத்தும்போது
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், கால்களில் உள்ள இரத்த நாளங்களின் உட்சுவரின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இதனால் கால்களின் உள்ள இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்திலும், உடல் உழைப்பு குறைவாக இருப்பதற்கும் குறைந்த வயதில் மரணம் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. உலகளவில், குறைந்த வயதில் ஏற்படும் மரணங்களில் 9% மரணங்களுக்கு உடல் உழைப்பின்மை காரணமாக இருக்கிறது.

அடுத்து செய்ய வேண்டியவை
தொடர்ச்சியாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்ப்பதும், அவ்வப்போது எழுந்து நடந்து சென்று இடைவேளை எடுத்துக்கொள்வதும் இதுபோன்ற ஆபத்துகளைக் குறைக்க உதவும். இத்தகைய இடைவேளை நேரங்களில் மிதமானது முதல் தீவிரமானது வரையிலான உடல் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்:
அடிக்கடி உங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் சிறிது நேரம் நின்றுகொண்டு இருக்கவும்
வேலை செய்ய உட்கார்ந்துகொண்டு இருக்கும்போது அவ்வப்போது கால்களை அசைக்கவும்
ஃபோனில் பேசும்போது எழுந்து நடந்து சென்று பேசவும்
இருக்கும் இடத்திலேயே மதிய உணவைச் சாப்பிடாமல், எழுந்து நடந்து சென்று சாப்பிடவும்
தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய கேடுகளைப் பற்றிப் புரிந்துகொண்டு, வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்வதால் இத்தகைய உடல்நலப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். வேலை செய்யும் நேரத்தில் நடப்பதற்கான வாய்ப்புக்காகக் காத்திருந்து அவ்வப்போது நடப்பதைவிட, எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் எழுந்து நின்று கொண்டு இருக்கலாம். இதுவும் உதவிகரமாக இருக்கும்.