Home பெண்கள் அழகு குறிப்பு உதடு அடிக்கடி வறண்டுபோய் கருப்பாகிவிட்டதா?… தயிர் போதும் இதை சரிபண்ண.

உதடு அடிக்கடி வறண்டுபோய் கருப்பாகிவிட்டதா?… தயிர் போதும் இதை சரிபண்ண.

28

இன்றைய நவீன காலத்தில் லிப்ஸ்டிக் போடாதவர் இருக்கவே முடியாது எனலாம். பெரும்பாலும் பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியில் எங்கும் செல்வதில்லை. அவ்வாறாக தொடர்ச்சியாக மேக்கப் போடுவோர் தங்களது சருமத்தை பாதுகாப்பது அவசியம் ஆகும்.

சிலர் தொடர்ச்சியாக லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடைய உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனைப் போக்க எவ்வித இரசாயன கலப்பும் இல்லாத பொருட்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம்.

தேன்:

சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாகத் தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையின் வறட்சியும் மறைந்துவிடும். தினமும் இதைச் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

வெள்ளரி:

வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.

கற்றாழை:

கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தைச் சிவப்பு நிறத்தில் மாற்றும்.

தயிர்:

தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்குத் தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்.