Home ஆரோக்கியம் உங்கள் உதட்டு முத்தம் தரும் நோய்கள் பற்றி தெரியுமா?

உங்கள் உதட்டு முத்தம் தரும் நோய்கள் பற்றி தெரியுமா?

163

பொது மருத்துவம்:இன்றைய நவ நாகரீக உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் அடைந்துள்ளோம். அறிவியல் வளர்ச்சிதான் இவை அனைத்திற்கும் முதல் காரணமாக உள்ளது. என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் அதனை மனிதன் சரியான முறையில் பயன்படுத்துகிறானா… என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. கால மாற்றங்கள் ஏற்பட ஏற்பட விஞ்ஞான மாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கேற்றவாறு நாமும் மாற்றம் பெறுகின்றோம். உண்மையில் “மாற்றம் ஒன்றே மாறாதது” போலும். அந்த வகையில் அன்பின் பரிணாமமும் அதிகரித்துள்ளது.

மக்களுக்கும் அன்பு, காதல், உறவு இவற்றிற்கான புரிதல் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித மாண்பில் மிக இன்றியமையாததான காதல் அதி அற்புதமானது. ஒருவர் காதல் வசப்பட்டால் உலகையே தலை கீழாக பார்க்க வைக்கும் அளவிற்கு இந்த காதல் பொல்லாததுதான். காதலின் வெளிப்பாடாக நாம் முத்தத்தை பரிமாறி கொள்வோம். குறிப்பாக உதடுகளில் கொடுக்கும் முத்தமே சற்றே அழகானதும் ஆழமானதும். ஆனால், இதில் கூட மோனோ நோய் தாக்கினால் என்னவாவது. இந்த பதிவில் முத்த நோய் பற்றிய முழு வரலாற்றையும் அறிவோம்.

காதலும் முத்தமும்..! ஒரு மனிதன் இன்னொரு உயிரை உயிர்ப்பிக்க இந்த காதல்தான் வழி செய்கிறது. ஒரு உறவு காதல் என்ற கோர்வையில் சேர்ந்தால் மட்டுமே அதற்கு அர்த்தம் கிடைக்கும். இன்றளவும் மனித இனம் பூமியில் உயிர்ப்புடன் இருக்க காதலே மிக முக்கிய காரணம். காதலுக்கு அடையாளமாக நாம் முத்தத்தை நமது இணையிற்கு தருகின்றோம். முத்தம் மிகவும் பலமானதுதான். ஆனால், ஒருவர் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் அது நோயாக மாறி விடுகிறது.

முத்த நோய்..! சற்றே வித்தியாசமான நோயாகத்தான் இது இருக்கிறது. ஒரு சாதாரண முத்தத்தால் கூட நோய் வருமா..? என்ற கேள்வி இப்பொது பலருக்கும் வந்திருக்கும். ஆமாங்க, உதட்டோடு உதடு வைத்து முத்தம் தரும்போது அது “முத்த நோயை” ஏற்படுத்துகிறதாம். இது “மோனோ” என்ற mononucleosis நோயாக கருதப்படுகிறது. நமது எச்சின் வழியாக இது பரவுமாம்.

மோனோ வைரஸா..? பொதுவாக பாக்டீரியாக்கள் கூட சில சமயங்களில் நன்மை தரும். ஆனால், பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் ஆபத்தானது. இந்த மோனோ நோய் Epstein-Barr virus (EBV) என்ற வைரசால் உருவாகிறது. இது எச்சிலிருந்து உருவாகி நோயாக மாறும். டீன் வயதில் உள்ளவர்களுக்கே இந்த நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். சில சமயங்களில் குழந்தைகளுக்கும் இது ஏற்படும்.

மோனோ நோயின் அறிகுறிகள்… இந்த முத்த நோயிற்கென சில முக்கிய அறிகுறிகள் உள்ளது. இந்த நோயானது நான்கு முதல் ஆறு வாரம் வரை நமது உடலில் இருக்கும். இனி அவற்றின் அறிகுறிகளை பற்றி அறிவோம். – காய்ச்சல் – தொண்டை வறட்சி – உணவு விழுங்கும் போது வலி ஏற்படுதல் – தலை வலி – பசியின்மை – தசைகள் வலுவிழத்தல் சில நேரங்களில் மண்ணீரல் அல்லது கல்லீரல் வீக்கம் அடையும்

மோனோ யாரை அதிகம் தாக்கம்..? இந்த மோனோ நோய் ஒரு சிலருக்கே அதிகமாக தாக்க கூடும். குறிப்பாக பள்ளி குழந்தைகள், 15 வயது முதல் 30 வயது உள்ள டீன் வயதினர்கள், கல்லூரி மாணவர்கள், அதிக முத்தம் கொடுப்பவர்கள். அத்துடன் அடிக்கடி உதட்டில் தங்கள் முத்தத்தை பரிமாறி கொள்ளும் நபர்களுக்கே இது அதிகம் தாக்கம்.

மோனோ முத்த நோயை கண்டறியலாமா..? எந்த வகையான நோயாக இருந்தாலும் அதனை கண்டறியலாம். சில வகையான நோயை மட்டுமே முதல் நிலையில் அறிய முடியாது. ஆனால் அத்தகைய கொடிய நோய் மோனோ இல்லை என்பதை முதலில் தெளிவு பெற வேண்டும். EBV டெஸ்ட் என்ற பரிசோதனை மூலம் இந்த நோய் உங்களுக்கு இருக்கா என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரத்த பரிசோதனை தேவையா..? எந்த வித நோயாக இருந்தாலும் நாம் ரத்த பரிசோதனை எடுப்பது வழக்கமே. அந்த வகையில் மோனோவிற்கும் ரத்த பரிசோதனை முக்கியமானது. ரத்த பரிசோதனையின் போது ரத்த லிம்போசைட்டுகள் அதிகமாக இருந்தால், இந்த முத்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்.

இந்தியாவில் மோனோவா…! மற்ற நோயை போன்று, மோனோ நோய் கிடையாது. இது மிக சிலருக்கே ஏற்பட கூடிய நோயாகும். மேலை நாட்டிலே உதட்டில் முத்தம் கொடுக்கும் முறை அதிகம் பின்பற்ற பட்டு வருகிறது. இது இந்தியாவில் மற்ற நாட்டை விட கம்மி என்பதால், இதன் தாக்கம் இங்கு குறைவே. இந்தியாவில் இது சில வகையான தொண்டை சார்ந்த பிரச்சினையாகவே மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எவ்வாறு தடுக்கலாம்..? நம் சிறு வயது முதலே, பிறர் நமக்கு கொடுக்கும் முத்தம் இது போன்ற மோனோ நோய் தொற்றுக்களை நம் உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இதனை தடுப்பது கடினமான ஒன்றுதான். எனினும், இது ஒன்றும் அவ்வளவு மோசமான நோய் கிடையாது. இந்த நோய் தொற்று ஒரே ஒரு முறைதான் ஒருவரின் வாழ்வில் ஏற்படுமாம்.

எவ்வாறு இதனை குணப்படுத்தலாம்..? எல்லா நோயிற்கும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்யும். அதே போன்றுதான் மோனோவிற்கும் தீர்வுகள் சில உள்ளன. இது பொதுவாக தொடை பகுதியை தாக்குவதால், தொண்டை சார்ந்தே மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பார்கள். corticosteroid போன்ற மருத்துவ முறை இதற்கு உகந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது, ஒரு சில மாதத்திலே குணமடையுமாம்.

வீட்டு வைத்தியம் இருக்கே..! நம் வீட்டில் உள்ள பொருட்களே பல வகையான நோய்களுக்கு விடையாக உள்ளது. அந்த வகையில் இந்த முத்த நோயிற்கு உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.மேலும், நன்றாக இளைப்பாற வேண்டும். வெதுவெதுப்பான நீரை அதிகம் குடிக்க வேண்டும். சிக்கன் சூப் இந்த மோனோவிற்கு மிக சிறந்தது.