Home பெண்கள் தாய்மை நலம் லீனியா நிக்ரா – கர்ப்பத்தினால் வயிற்றில் தோன்றும் வரி

லீனியா நிக்ரா – கர்ப்பத்தினால் வயிற்றில் தோன்றும் வரி

89

லீனியா நிக்ரா என்றால் என்ன?

லீனியா நிக்ரா (லீனியா= கோடு, நிக்ரா=கருப்பு) என்பது “கர்ப்பத்தின் போது வயிற்றில் உருவாகும் வரிகளைக் குறிக்கும் மருத்துவச் சொல்லாகும். கர்ப்பத்தின்போது வயிற்றின் குறுக்கில் உருவாகும் கருப்பு வரியே ஆகும். இருப்பினும், இந்த வரிகளால் ஏதும் பிரச்சனை இல்லை. இந்த வரி எப்படி உருவாகிறது என அறிந்துகொள்ள, தொடர்ந்து படிக்கவும்.

இந்த வரி உண்டாகக் காரணங்கள்:

கர்ப்பத்திற்கு முன்பே வெளிறிய வரி ஒன்று இருக்கும். அதன் நிறம் வெளிறி இருப்பதால் பளிச்சென்று தெரிவதில்லை. இந்த வரியை லீனியா அல்பா (வெண்ணிற வரி என்று பொருள்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த வரி இடுப்புத்தள எலும்பிலிருந்து தொப்புள் நோக்கிச் செல்லும்.

கர்ப்பத்தின்போது, தோலில் சில மாற்றங்கள் ஏற்படும், நிறமும் மாறலாம். தோலில் ஆங்காங்கே கருமையான பகுதிகள் தோன்றலாம், குறிப்பாக கருப்பாக இருக்கின்ற, கருப்பான கூந்தல் உள்ள பெண்களுக்கு இவை நன்கு தெரியும். இதுபோன்ற நிறமாற்றங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன. ஹார்மோன்கள் அளவு அதிகரிப்பதால் மெலனின் எனப்படும் நிறமிகளின் உற்பத்தி தூண்டப்படுகிறது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமிஸ்டரில் (4-6 மாதங்கள்) வெளிர் நிறத்தில் இருக்கும் வரி நன்றாகத் தெரியும் வகையில் கருப்பாகிறது, இதனையே லீனியா நிக்ரா என்கிறோம்.

குழந்தையின் பாலினத்திற்கும் லீனியா நிக்ரா என்ற இந்த வரிக்கும் ஏதேனும்தொடர்பு உள்ளதா?

இந்த வரி இடுப்பு வரை நீண்டிருந்தால், கருவில் இருப்பது ஆண் குழந்தை என்றும், வயிற்றின் அடிப்பகுதிக்குச் சென்றால் பெண் குழந்தை என்றும் பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல.

இந்த வரியைப் போக்க என்ன செய்வது?

இந்த வரி உங்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாது, குழந்தைக்கும் இதனால் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. ஆகவே இதுபற்றி நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. குழந்தை பிறந்த பிறகு, உங்கள் ஹார்மோன்கள் மீண்டும் பழைய அளவுக்குக் குறைந்ததும், இந்த வரி தானாக மறைந்துவிடும்.

இந்த வரி மிகவும் கருப்பாகத் தெரியாதபடி செய்ய சில வழிமுறைகள்:

ஃபோலிக் அமிலம் மற்றும் கர்ப்பத்தின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின்களை எடுத்துக்கொள்ளலாம்
சூரிய பாதுகாப்புக் காரணி (SPF) -15 கொண்ட சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தலாம்
சூரிய ஒளி படாமல் தவிர்க்கவும்