Home உறவு-காதல் உங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

உங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

32

காதலன், காதலியோ, கணவன், மனைவியோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் என்பது அவசியம். தம்பதியர் இடையேயான தகவல்தொடர்பு சரியான அளவில் இருந்தால் காதலுக்கு இடைவெளி ஏற்பட வாய்ப்போ இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இருவருக்கு இடையிலான காதல் நீடிக்க, காமம் கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியம் இல்லையாம். அதாவது செக்ஸையும் தாண்டி காதல் நீடிக்க முடியுமாம்.. இப்படிச் சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இதற்காக 2201 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவையும் வெளியிட்டுள்ளனர். மேற்கொண்டு படியுங்களேன்.

காதலியிடம் செக்ஸை எதிர்பார்த்திராமல் அவரது பிற விஷயங்களிலும் கூட நீங்கள் ஆர்வம் காட்டலாம். அப்படிச் செய்தாலும் கூடஉங்களது காதல் நீடிக்கும் என்கிறார்கள் இவர்கள்.

காதலில் எது உங்களுக்கு முக்கியமானதாக தோன்றுகிறது என்று ஒரு பட்டியலிடச் சொன்னார்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் ஆய்வாளர்கள். அதில் ரொமான்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொடுத்திருந்தனர்.

காதலில், காமமும் தகவல் தொடர்பும் மட்டும்தான் முக்கியம் என்றில்லை. காதலியின் இன்ன பிற விருப்பங்கள், அவரது வேலை, அவரது வளர்ச்சி, முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்தும் நீங்கள் அக்கறை காட்டலாம். அவருக்கு எப்படியெல்லாம் துணையாக இருக்க முடியுமோ அதையெல்லாம் செய்யலாம் என்பது இந்த ஆய்வின் முடிவாம்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சரியான தகவல் தொடர்பு அவசியம் என்பதைத்தான். அதேபோல தங்களை தங்களது பார்ட்னர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பலர் தெரிவித்துள்ளனராம்.

வெற்றிகரமான உறவுக்கு பார்னர்களிடையே நல்ல புரிந்து கொள்ளுதல் இருப்பது அவசியம் என்பதையே இந்த ஆய்வு உணர்த்துவதாக இதற்குத் தலைமை தாங்கிய பிஜி, தெற்கு பசிபிக் பல்கலைக்கழக சைக்காலஜி பேராசிரியர் ராபர்ட் எப்ஸ்டீன் கூறுகிறார். ஒவ்வொருவரின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றையும் தகவல் சேகரித்தனர். அதை வைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்