Home பாலியல் ஆபாச படம் பார்ப்பதால் வாழ்கையில் உண்டாகும் பாதிப்பு தகவல்

ஆபாச படம் பார்ப்பதால் வாழ்கையில் உண்டாகும் பாதிப்பு தகவல்

748

பாலியல் செய்திகள்:ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார்.

அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று தன்னை நேசிக்க வேண்டுமென்று விரும்பினார். அடுத்த சில தினங்கள் ஸ்கிரிப்ட்டிற்கு அப்பாற்பட்டு நடந்தது. நன்கு படித்தவரான அவளின் கணவர், அவளின் தேவையை பூர்த்தி செய்தார்.

ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே இருந்தது: உடலுறவு முரட்டுத்தனமாகவும், சில நேரங்களில் வன்மமாகவும் இருந்தது.

ஆபாசப் படத்திற்கு அடிமையாகிவிட்ட ரத்னாவின் கணவர், அவளை அந்த வீடியோவில் இருப்பதை போன்று செயல்படுமாறு வற்புறுத்தினார். சில காலத்தில் தன்னுடைய நடத்தையை கணவர் மாற்றிக்கொள்வார் என்று நம்பிய அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் மேலும் வன்மமாக மட்டுமே மாறினார். அவன் இரவு முழுவதும் ஆபாசப் படங்களை பார்க்க தொடங்கினான். பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரையை எடுத்துக்கொண்டு, அவனுடன் உறவு கொள்ளுமாறு மனைவியை வற்புறுத்தினான். அவன் சொன்னதை செய்யாவிட்டால் தாக்கவும் செய்தான்.

ஒருநாள் ரத்னாவின் கால்களை சீலிங் பேனுடன் கட்டி வைத்து, ஆபாசப் படத்தில் உள்ளதை போன்று உடலுறவுக் கொண்டான். இந்த முழுச் செயலும் அவள் மனதை உடைத்ததுடன், அவளை உணர்ச்சி ரீதியாய் நொறுக்கியது.

அவனது செயல்பாடு தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு அதிகமானதால், மனமின்றி விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள். “இந்த முழு நிகழ்வும் ரத்னாவின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அவளுக்கு தன்னை சுற்றியுள்ளவர்களை நம்புவதில் பிரச்சனைகள் உள்ள நிலையில், தற்போது தன்னுடைய பெற்றோர்களுடன் வசிக்கிறார். அவளது கணவன் மறுதிருமணம் செய்துக்கொண்டான்,”என்கிறார் சமூக சேவகரான ராதா கவாலே.

பல்வேறு விதமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக டாடா டிரஸ்ட் மற்றும் மகாராஷ்டிர அரசாங்கம் இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைப்பிற்காக வேலை செய்யும் சமூக சேவகர்களில் ஒருவராகவும் ராதா இருக்கிறார்.

“ஆபாசப் படங்களுக்கு அடிமையான கணவர்களால் வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பெண்கள் குறித்த புகார்கள் எங்களுக்கு ஏராளமாக வருகின்றன,” என்று அவர் கூறுகிறார். “ஆபாசப் படங்களில் பார்த்த வாய்வழி உறவு அல்லது ஆசனவாய் புணர்ச்சிக்கு மனைவியை இணங்கும்படி கூறுவதும் மற்றும் அவர்கள் இந்த கோரிக்கைகளுக்கு இணங்கவில்லையானால், அவர்களைத் தாக்குவதும் ஒரு பொதுவான நடைமுறையாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையானது கிராமம் அல்லது நகரம் அல்லது வேறுபட்ட சமூக மற்றும் பொருளாதார நிலை என்று பாகுபாடில்லாமல் உள்ளது. ஆண்கள் போதையில் இருக்கும்போது இத்தகைய தாக்குதல்களில் பெரும்பாலானவை நடக்கிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மலிவான விலையில் கிடைக்கும் திறன்பேசிகள் மற்றும் இலவச இணைய பயன்பாட்டின் ஆகியவை ஆபாசப் படம் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளன.

விடோலி என்னும் அமைப்பின் இணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான சுப்ரட் கர், இந்தியாவில் ஆபாசப் படங்களை பார்ப்பது 2016-2017ம் ஆண்டு காலக்கட்டத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார். விடோலி பகுப்பாய்வு மற்றும் தரவு நுண்ணறிவு சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. “எங்கள் கணக்கெடுப்பின்படி கடந்த வருடத்தில் இலவச இணையம் மற்றும் மலிவான திறன்பேசிகளின் காரணமாக ஆபாசப் படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

மரத்வாடா பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜோதி சப்கல், இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு சில பகுதிகள் என்றல்லாது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் நடப்பதாக கூறுகிறார். “சில நேரங்களில் ஆண்களின் இறுதி நோக்கமாக பாலியல் திருப்தி என்பது இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தங்களின் ஆண்மையை நிரூபிக்க அல்லது தங்களின் மனைவிகளை கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர். ‘என்னுடைய மனைவி என்னுடைய சொத்து, நான் ஆவலுடன் எதை வேண்டுமானாலும் செய்வேன்’ என்ற எண்ணத்தின் காரணமாக அதுபோன்ற வன்முறைகள் நடக்கின்றன’.

ஒரு பெண்ணின் கணவர் ஆபாச படங்களை பார்த்து அதில் சித்தரிக்கப்பட்ட பாலியல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தன் மனைவியிடம் கோரிய ஒரு சம்பவத்தை ராதா விவரிக்கிறார். ஒருமுறை, அவன் தன் மனைவியை ஒரு மர கட்டிலில் கட்டி, அவளது உறுப்பில் வாழைப்பழத்தை சொருகி, அதை படம்பிடித்து தனது நண்பருடன் பகிர்ந்து கொண்டார். “அவன் ஒரு தினசரி ஊழியராக இருந்தாலும், அவனிடம் ஆபாசப் படம் பார்ப்பதற்காக ஒரு திறன்பேசியும், மலிவான இணைய இணைப்பும் இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

உணர்ச்சி சம்பந்தப்பட்ட ஈடுபாடு இல்லை

ஹைதராபாத்தை சேர்ந்த பாலியல் மருத்துவரான ஷர்மிளா முஜும்டர், அதுபோன்ற நிலையில் இருப்பதாக ஒரு பெண் உணரும்பட்சத்தில் உடனடியாக உதவியை நாட வேண்டும். “தீவிர பாலியல் செயல்கள் மூலமாக நடக்கும் எந்த வகையான வன்முறை அல்லது அசாதாரண பாலியல் எண்ணங்களை தூண்டுவதை ஏற்றுக்கொள்ள கூடாது.”

ஜோடிகள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவுக் கொண்டால்தான் அதில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் காதலையும், காமத்தையும் எதிர்பார்க்கின்ற ரத்னா போன்ற பெண்களுக்கு இது இன்னும் சிம்ம சொப்பனமாகவே உள்ளது. பாலியல் தொடர்பான விடயங்களில் இந்திய பெண்களின் கருத்துக்கள் ஏற்கப்படுவது அரிதே.

ஆபாசப் படங்களை பார்ப்பதில் தவறேதும் இல்லை என்றும் சர்மிளா நம்புகிறார். “சில வேளைகளில் காதலர்களின் கூச்ச உணர்வை போக்கி, ஆரோக்கியமான உடலுறக்கு உதவுகிறது,” என அவர் எண்ணுகிறார்.

பாலுறவு பற்றி பேசுவது தவறானது என நினைக்கும் ஒரு நாட்டில், பாலியல் பற்றி பள்ளிகளிலும், குடும்பங்களிலும் வெளிப்படையான உரையாடல்கள் இல்லாதவரை, கணவன் மற்றும் மனைவி இடையே ஆரோக்கியமான உடலுறவு என்பது தொலைத்தூர கனவாகவே இருக்கும்.”

முதலில் பெண்கள் பேசத்தொடங்குவது முதல் படியாக இருக்கிறது என்று நம்பும் ராதா, பின்னர் அவர்களின் கணவர்களும், குடும்பங்களும் செவிமடுக்க தொடங்குமென்று நம்புகிறார்.

இந்தியாவில் ஆபாசப் படங்களை பார்ப்போரின் பழக்கவழக்கங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள்

ஒருநாளில் ஆபாசப் படம் பார்ப்பதற்கு செலவிடும் நேரம்:

உலகம் – 8.56 நிமிடங்கள்

இந்தியா – 8.22 நிமிடங்கள்

மகாராஷ்டிரா – 8.37 நிமிடங்கள்

சராசரி பக்கப் பார்வைகள்:

உலகம் – 7.60 நிமிடங்கள்

இந்தியா – 7.32 நிமிடங்கள்

மகாராஷ்டிரா – 7.91 நிமிடங்கள்

(போர்ன் ஹப் வெளியிட்ட தரவுகளின்படி)