பெண்கள் உடை:வெயில் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவு போலவே உடுத்தும் ஆடை விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.
கோடைக்காலத்தில்தான் பெரும்பாலான சரும நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு, நம் அலட்சியமும் ஒரு காரணம். பெண்கள் தங்களின் வசதிக்காக ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிவது ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த வகையான ஆடைகளைக் கோடையில் தவிர்ப்பது அவசியம். இவை பல சருமப் பிரச்சனைக்குக் காரணியாக அமைகிறது. லெகிங்ஸ் பொதுவாக பனியன் மெட்டீரியலில் உருவாக்கப்படுகிறது.
ஜீன்ஸ் துணியும் முரட்டுத்தன்மையுடன் இருக்கும் என்பதால், வியர்வையை உறிஞ்சாது. இதனால், சுரக்கும் வியர்வை உடலிலே தங்கி, பூஞ்சையை ஏற்படுத்தும். இதனால், அரிப்பு, படை, வியர்க்குரு, சிறிய கட்டிகள், தேமல் என ஆரம்பித்து, சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்னை வரை செல்லும். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, காட்டன் ஆடைகளையே அணியுங்கள். நீங்கள் அணியும் ஆடையும் தளர்வாக இருக்க வேண்டும்.
சிலர், குளிர்ச்சி இருப்பதற்காக ஈரமான ஆடைகளை அணிவது, குளித்ததும் உடலைச் சரியாகத் துவட்டாமல் ஆடை அணிந்துகொள்வது போன்ற பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள். இது, மிகவும் தவறான பழக்கங்கள். ஈரமான ஆடைகள், பல்வேறு நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமையும். இதைத் தவிர்க்கவும். சரியான வழிகாட்டலின்றி, வீட்டு வைத்தியம் செய்யவும் வேண்டாம். இது சிலருக்கு அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்துவிடும்.