Home பெண்கள் அழகு குறிப்பு கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

17

பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு
நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.

அவ்வாறு அழகுபடுத்தும பெண்கள் முகம், கழுத்து மற்றும் கைகளை மட்டும் தான் பராமரிப்பார்கள். சுருக்கங்களானது முகம், கைகளுக்கு மட்டும் வருவதில்லை, வயதானால் உடல் முழுவதும் தான் வரும்.

மேலும் சிலருக்கு சுருக்கங்கள் இளம் வயதிலேயே வந்துவிடும். இத்தகைய சுருக்கங்களை அழகு நிலையங்களுக்கு சென்று நீக்குவதை விட, வீட்டில் இருந்தே ஈஸியாக சரிசெய்யலாம்.
கால்களில் உள்ள சுருக்கங்களை போக்கஸ

1. சருமத்தில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அதுவும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் அல்ல, கால்களுக்கும் தான். அவ்வாறு ஈரப்பசை இல்லாமல் இருந்தாலும் சுருக்கங்கள் வரும்.

ஆகவே ஒரு நாளைக்கு இருமுறை உடம்புக்கு தடவும் லோசனை தடவ வேண்டும். அதுவும் காலையில் குளித்த பின்னும் மற்றும் இரவில் படுக்கும் முன்னும் தேய்த்து 15 20 நிமிடம் தேய்த்து, பிறகே ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் லோசனானது சருமத்தில் நுழைய சிறிது நேரம் ஆகும். ஆகவே இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் நாளடைவில் சுருக்கங்கள் போய்விடும்.

2. சுருக்கங்களை போக்க வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பேக்கை போடலாம். எலுமிச்சை பழச்சாற்றுடன் சிறிது ஆப்பிள் வினிகர் மற்றும் சர்க்கரையை சேர்த்து கால்களுக்கு தடவி 8 10 நிமிடம் தேய்த்து, குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து துடைக்க வேண்டும். மேலும் துடைக்கும் போது அழுத்தி துடைக்க கூடாது. இதனால் சுருக்கங்கள் மறையும்.

3. நிறைய பெண்கள் சுருக்கங்கள் போக ப்ளீச் செய்வார்கள். ஆனால் அவ்வாறு செயற்கை முறையில் செய்யும் ப்ளீச் செய்தால் சுருக்கங்கள் நிரந்தரமாக போகாது. மேலும் அது சருமத்தை எரித்து விடும். ஆகவே அவ்வாறெல்லாம் ஏற்படாமல் இருக்க இயற்கை முறையே சிறந்தது.

அந்த இயற்கை முறைக்கு எலுமிச்சை ப்ளீச் தான் சிறந்தது. சிறிது எலுமிச்சை துண்டை தினமும் கால்களில் தேய்த்து 3 நிமிடம் ஊற விட்டு, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, பிறகு பாடி லோசனை மறக்காமல் தடவ வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சருமத்தை வறண்டு விடச் செய்யும்.

4. ஆப்பிள் வினிகர் ஒரு சிறந்த சுருக்கத்தை போக்கும் பொருள். சிறிது ஆப்பிள் வினிகரை குளிக்கும் போது நீரில் விட்டு குளித்தால் நல்லது. வேண்டுமென்றால் தினமும் ஒரு முறை ஆப்பிள் வினிகரால் கால்களை கழுவினால் மிகவும் நல்லது. ஏனெனில் அது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை மற்றும் சுருக்கங்களை எளிதில் நீக்கிவிடும்.