குழந்தைகள் வளர்ந்த பின் வாழ்க்கையை கற்பிக்க துவங்குவதைவிட, வளர, வளர அந்தந்த வயதில் அவர்களுக்கு தேவையானவற்றை கற்பிப்பது தான் உன்னதம் மற்றும் சிறந்தது. இதை பெற்றோர்கள் சரியாக செய்ய வேண்டும். இல்லையல் குழந்தைகள் மந்தமாக தான் இருப்பார்கள்.
சமூகத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், மரியாதை அளிப்பது, தனியாக உலகில் எப்படி வாழ்வது, பெற்றோர் இல்லாத போது வீட்டை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது எப்படி, பணத்தின் அருமை என நீங்கள் பள்ளிப்படிப்பை தாண்டி சமூகம், வாழ்க்கை சார்ந்த படிப்பை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் குழந்தைக்கு 15 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய 7 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்….
பணம் சேமிப்பதன் அவசியம் என பொருளாதாரம் மற்றும் சேமிப்பு குறித்து கற்றுக் கொடுங்கள். பணத்தை ஒவ்வொரு செலவுக்கு எப்படி பிரித்து செலவழிக்க வேண்டும். எப்படி குடும்பத்தை நீங்கள் நடத்துகிறீர்கள், பணத்தின் அருமை மற்றும் பயன்பாடு குறித்து கற்பிக்க தவற வேண்டாம்.
தங்களை தாங்களே எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். மன ரீதியாக, உடல் ரீதியாக, ஆரோக்கியம் ரீதியாக அவர்கள் தங்களை காத்துக் கொள்ள நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
முடிந்த வரை இருபதுகளை தாண்டும் வரை குழந்தைகள் அதிகம் ஹோட்டல் உணவுகள் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லாத போது வீட்டிலேயே சமைத்து உண்ண குறைந்தபட்ச சமையல் நுணுக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
குறைந்தபட்சம் சின்ன, சின்ன காயங்களுக்காவது எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என கற்றுக் கொடுங்கள். இது, அவர்களுக்கு இல்லையெனிலும் மற்றவர்களுக்கு உதவ பயன்படும்.
வீட்டு வேலைகள், வீடு துடைப்பதில் இருந்து, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, துணிகளை துவைப்பது, பாத்திரங்கள் கழுவுதல் என நீங்கள் இல்லாத போது வீட்டை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையானவற்றை கற்றுக் கொடுங்கள்.