காதல் உறவுகள்:ஒவ்வொரு உறவிலும் ஒரு கட்டம் இருக்கும். அனைத்து உறவும் கடைசி வரை நீடிக்கும் என கூற முடியாது. எந்த உறவிலும் பிரிவு என்பது அதன் முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. அப்படி ஒரு உறவில் இருந்து பிரியும் போது, அந்த மன வலியில் இருந்து வெளியே வருவது அவரவரின் தனிப்பட்ட பொறுப்பாகும். உங்கள் சந்தோஷத்திற்கு நீங்களே பொறுப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பது யாரும் மறுக்க முடியாது. இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சந்தோஷமாக வாழும் உரிமை உள்ளது. உங்களின் முதல் உறவில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான ஒன்று உள்ளது – ஈடு செய்ய முடியாத வருத்தம் தெரிவித்தல், எட்ட முடியாத கனவு, சொல்ல முடியாத ரகசியம் மற்றும் மறக்க முடியாத காதல். முதல் காதல் என்பதை யாரும் அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியாது. அதுவும் முதல் காதல் தோல்வியில் முடிந்தால் அந்த முறிவினால் ஏற்பட்டுள்ள வெறுமையை மாற்றுவது சிரமமாக இருக்கும்.
சரி வாங்க, முதல் காதலில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைப் பார்க்கலாம். இதோ அந்த 7 பாடங்கள்…
அதிகமாக எதிர்ப்பார்க்காதீர்கள்
சொல்லபோனால் முதல் காதல் அல்லது உறவில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் இது தான். கண்டிப்பாக நாம் நம் முதல் உறவில் இருந்து அதிகமாக எதிர்ப்பார்த்திருப்போம். அதிகமாக எதிர்ப்பார்த்தால் விருப்பத்திற்கு மாறான துயரமே வந்து சேரும் என்பதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
மற்றவர்களின் சந்தோஷத்திற்காக உங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்தல்
பல நேரங்களில், உங்கள் காதலன் அல்லது காதலியின் சந்தோஷத்திற்காக உங்கள் சந்தோஷத்தை நீங்கள் தியாகம் செய்வீர்கள். இதனால் உங்கள் மன நிம்மதியை கூட நீங்கள் இழக்கலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; மற்றவர்களின் சந்தோஷத்தை விட உங்கள் சந்தோஷமே முக்கியமானது.
காதல் என்று ஒன்று உள்ளது
காதல் என்பது உள்ளது. அனைவரும் காதலில் விழுவதும் இயல்பே. இது நம் முதல் காதலில் இருந்து கற்றுக் கொள்ளும் மற்றொரு பாடமாகும். முக்கியமாக காதல் புரிவதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு மனிதனாக நீங்கள் திடமாவீர்கள்
ஆம்! காதல் முறிவு என்பது உங்களை முன்பை காட்டிலும் திடமாக்கும். முதலில் இருந்ததை விட உணர்ச்சி ரீதியான பலவீனம் இப்போது குறைவாகவே காணப்படும்.
போனது போகட்டும் என்பதைக் கற்றுக் கொள்வீர்கள்
உங்களுடையது அல்லாததை போக விடுங்கள், உங்களுக்கு சொந்தமில்லாதவர்களை போக விடுங்கள் – என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ கற்றுக் கொள்வீர்கள்.
மற்றவர்களை அதிகமாக சார்ந்திருக்க கூடாது என்பதை கற்றுக் கொள்வீர்கள்
உங்கள் முதல் காதலை பொறுத்த வரை, நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியை அதிகமாக சார்ந்திருப்பீர்கள். உங்கள் உறவு முறிந்த பிறகு தான், அதிகமாக சார்ந்திருப்பது தவறு என்பதை உணர்வீர்கள்.
உங்கள் தொழில் ரீதியான வாழ்க்கையின் மீது கவனம் செலுத்த தொடங்குவீர்கள்
முதல் காதலில் விழுந்த சந்தோஷம் தலைக்கேறும் போது பலர் தங்கள் வேலையின் மீதான கவனத்தை இழக்கிறார்கள். காதல் முறிவு ஏற்படும் போது, நீங்கள் உங்கள் வேலையில் கவனத்தை செலுத்துவீர்கள். முக்கியமான நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்துவீர்கள்.
காதல் மீண்டும் வரும்
அனைத்தையும் மீறி, காதல் மீண்டும் வரும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். காதல் மறையும்! ஆனால் அது மீண்டும் மலரும். அடுத்த முறை வரும் போது நீங்கள் இன்னமும் திடமாக இருப்பீர்கள்.