எலும்புகளை ஊடுருவும் குளிர் காலத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நேரத்தோடு உறங்கத்தான் பலரும் நினைப்பார்கள். மார்கழிக் குளிர் மார்பில் ஊடுருவ இன்னும் கொஞ்சம் உறங்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிகாலையிலே கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே என்ற ஆசையும் மனதில் எழும். குளிர் காலத்தில் உணர்வுகள் கிளர்ந்து எழுவது கொஞ்சம் மந்தமானதாகத்தான் இருக்கும்.
தொட்டாற் சுருங்கியாய் இருக்கும் துணையை சூடேற்றும் விளையாட்டுக்களை விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
செக்ஸ் தேவைகள்
குளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். எனவே கோடைகாலத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுகளுக்கு நாம் மன தைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.
சூடான விளையாட்டுக்கள்
நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வா ளர்களின் கருத்து. நிறைய ஆண்களு க்கு கடும் குளிரை அனுபவிக் கும்போது எழுச்சியே இருக்காது. அப்போது கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்ஸ சூட்டைக்கிளப்பும் விளையாட்டுக்கள் என நிலைமையை மாற்றலாம்.
கோடையின் சூடு
நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோ கிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடை காலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.
நீல ஒளி தேவதை
படுக்கை அறையில் நீல நிற வெளிச்சம் கொண்ட லைட்டினை ஒளிர விடுங்கள். இந்த லைட் தெரபி செக்ஸ்க்கு ஏற்றதாம். இரவிலோ, அதிகாலையிலோ நீல நிற விளக் கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான உஷ்ணம் கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.
இதமான உணவுகள்
கோடையில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் சில உணவுகள் இருப்பதைப் போல குளிர் காலத்திலும் கிளர்ச்சியை தரும் சில உணவுகள் இருக்கின்றன. கிழங்கு வகை உணவுகள், பயறுவகை உணவுகளை தம்பதியர் உண்ணவேண்டும். பச்சைக்கீரைகள், கிட்னி பீன்ஸ், கறுப்பு பீன்ஸ், கொட்டை வகை உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். அதே போல கடல் உணவுகளும் உடம்பின் சூட்டினை தக்கவைக்குமாம்.
கொழுப்பு வேண்டாம்
குளிர்காலத்தில் கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. எளிதா ன சாப்பாட்டுக்கு மாற வேண் டும். இதன்மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.
சூடான முத்தம்
குளிர்காலத்தில் பேச்சில் கொஞ்சம் கிளர்ச்சியும், மூச்சிலும், முத்தத்தில் கொஞ்சம் சூடு அதிகம் வேண்டும் என்கின்றனர். நெற்றியில் துவங்கி பாதம் வரை சூடான விளையாட்டுக்களை விளையாடினால் குளிர்ச்சியான இரவினை சூடு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.