Home அழகு குறிப்பு கூந்தல் அழகு குளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்?..

குளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்?..

45

பருவ நிலைகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அதற்கு ஏற்றபடி நாம் வாழ்க்கை முறையை மாற்றித்தான் ஆக வேண்டும். குறிப்பாக, நம்முடைய உடலை பருவநிலைக்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்வது நல்லது.

மற்ற பருவ காலங்களை விட, குளிர்காலத்தில் நம்முடைய இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் பராமரிப்பது அவசியம். குறிப்பாக, தலைமுடியில் குளிர்காலத்தில் தான் ஏராளமான பிரச்னைகள் உண்டாகும்.

அதனால் முடியை முறையாகப் பராமரிப்பது மிக அவசியம்.

வழக்கம்போல், முடியை அடிக்கடி ட்ரிம் செய்ய வேண்டும்.

குளிர்காலத்தில் தான் பொடுகுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதனால் இயற்கை வழிகளைப் பின்பற்றி அவற்றை சரிசெய்ய வேண்டும்.

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.

பொடுகுதானே என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தலைக்கு குளித்தபின் முடியை உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலை முடியுடன் இருந்தாலோ மற்றும் அதிக உஷ்ணத்தினாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வராமல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து விடும்.

நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

இதுபோல் கூந்தல் பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்துவது, குளிர்காலத்தில் உண்டாகும் முடி உதிர்வைத் தடுக்கும்.