Home இரகசியகேள்வி-பதில் இருபது வயதில் இனம்புரியா குழப்பங்கள்!!

இருபது வயதில் இனம்புரியா குழப்பங்கள்!!

22

சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் பி.காம் கடைசி வருடம் படிக்கிறேன். என் வயதையொத்த எல்லாருக்கும்வாழ்க்கையில் ஏதோ ஒரு
கவலை இருக்கும். எனக்கோ கவலைகளே வாழ்க்கையாகிவிட்டது. ஒன்றா, இரண்டா பட்டியல் போட..? சில வருடங்களுக்கு முன்பு அப்பா
தவறிவிட்டார். நினைவு தெரிந்த நாள் முதல் அவருடன் மிகப் பெரிய
அன்னியோன்யம் இருந்ததில்லை. எனக்கு ஒரே ஒரு அக்கா. காதல்
திருமணம் செள்து கொண்டவள். இப்போது 8 மாத கர்ப்பம். அவளுக்குக்
கல்யாணமாகிப் போனதிலிருந்து நான் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். அவளது பிரிவை என்னால் தாங்கிக் கொள்ளவே
முடியவில்லை. இத்தனைக்கும் அவர்களது வீடு என் கல்லூரிக்கு அருகில்தான் என்பதால்,கல்லூரி முடிந்ததும் நேரே அங்கே போள் விடுவேன்.
ராத்திரிதான் வீடு திரும்புவேன்.அக்காவின் கணவருக்கும் என் மேல் பாசம் அதிகம். அப்பா இறந்த பிறகு அம்மாவும் ரொம்பவே மாறிவிட்டார். அதுவரை
என்னிடம் நன்றாகப் பேசிய அம்மா, இப்போதெல்லாம் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதும் எதிர் வீட்டில் உள்ள தன் தோழியுடன் பேசிக்
கொண்டிருக்கிறார். பி.காம் முடித்துவிட்டு, எனக்கு ஐஐஎம்&மில் சேர
விருப்பம்.அதற்காக கேட் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்
கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு கணக்குப் பாடமே வர மாட்டேன் என்கிறது.கணக்கு நன்றாகப் போட்டால் தான் ஐஐஎம்&மில் சேர முடியும்.
இது தவிர எனக்கு நிறைய முடி கொட்டுகிறது. முகமெல்லாம் பரு வேறு.
20 வயதில் இனம்புரியா குழப்பங்கள்! எங்கள் வீட்டைப் பொறுத்தவரை பணத்துக்குப் பஞ்சமே இல்லை.இறப்பதற்கு முன்பு வரை அப்பா பிசினஸ் செள்து கொண்டிருந்தார்.ஆனால், அதை சரியாகச் செள்யாததால் ஏகப்பட்ட நஷ்டம். அக்காவுக்குக் கல்யாணம் முடிந்ததும், அவளது கணவர்தான் அந்த பிசினஸை எடுத்துச் செள்து வருகிறார். நஷ்டத்தில் இருந்ததை
லாபத்துக்கு மாற்றியவரும் அவரே. எனக்கும், எங்கள் குடும்பத்துக்குமான பொருளாதாரத் தேவையை அவர்தான் பார்த்துக் கொள்கிறார். எங்கள்
குடும்பத்தில் இத்தனை பிரச்னைகள் இருக்கும் நிலையிலும், அக்காவின் கணவர் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறாரே என நினைக்கும்போது என் கவலை இன்னும் அதிகமாகிறது. அடுத்த மாதம் என் அக்காவுக்கு வளைகாப்பு. அம்மா வர மாட்டாரே என்று கவலை. எனக்கு மட்டும் ஏன் மேடம் இப்படி அடுக்கடுக்காக கவலைகள்? என் வயதுப் பெண்களைப் போல என்னால் மட்டும் ஏன் சகஜமாக இருக்க முடியவில்லை?
எல்லாவற்றையும் நினைத்து எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிற எனக்கு நீங்கள்தான் நல்ல ஆலோசனை சொல்ல வேண்டும்.

அன்புப் பெண்ணே,

இருபது வயதில் உங்களுக்குள் எத்தனை எத்தனை கேள்விகள்…
குழப்பங்கள்? அப்பா 60 வயதில் தவறி விட்டதாகக் குறிப்பிட்டிக்கிறீர்கள். ஆனாலும் உயிருடன் இருந்தவரை அவருடன் பாசமாக இருந்ததில்லை
என்றும் சொன்னதால், அவரது இழப்பு உங்கள் கவலைக்கான
காரணங்களில் ஒன்றில்லை எனத் தெரிகிறது. கல்யாணமாகிப் போனாலும், பக்கத்திலேயே இருக்கிற அக்காவுடன்தான் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுகிறீர்கள். அக்காவும், அவரது கணவரும் உங்களை ஒரு குழந்தை
மாதிரிப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ராத்திரி வீடு
திரும்பியதும், உங்கள் அம்மா ஓடி வந்து உங்களிடம் பேச வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? தனிமையில் வாடுகிற உங்கள் அம்மா,தனக்கென ஒரு தோழியை வைத்திருப்பது குற்றமா?அக்காவின் கணவர் அநியாயத்துக்கு நல்லவர் என்பதிலுமா கவலை? ஏற்கனவே உங்கள் அப்பா முதலும், முயற்சியும் போட்டு உருவாக்கி வைத்திருந்த பிசினஸைதான் அவர் முன்னேற்றியிருக்கிறார்.அதிலிருந்துதான் உங்கள்
குடும்பத்துக்குப் பண உதவி செய்கிறார்.இலவசமாகச் செள்வதாக நினைத்து
சுய பச்சாதாபம் அடையாதீர்கள்.கணக்கு வரவில்லை என்று புலம்புகிற நீங்கள், ஏன் ஐஐஎம் ஆசையிலேயே இருக்க வேண்டும்?உங்களுக்கு எது முடிகிறதோ, உங்கள் தகுதிக்கு ஏற்றதோ அப்படியொரு படிப்பை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது?முடி கொட்டுகிறது, பரு வருகிறது என்பதெல்லாமா கவலைகள்?முதல் வேலையாக உங்களைப் பற்றியே நினைப்பதையும்,கவலைப்படுவதையும் நிறுத்துங்கள். உங்கள் அக்காவுக்குப்
பிரசவ தேதி நெருங்குகிறது. அவரை எப்படியெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாம், எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்தலாம் என்று பாருங்கள். அடுத்த மாதம் அக்காவுக்கு வளைகாப்பு என்கிறீர்கள். உங்கள்
குடும்பம் சார்பாக நீங்கள் அதில் கலந்து கொண்டு,அக்காவையும், அவரது வீட்டாரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்.வாழ்க்கை சொர்க்கமா, நரகமா
என்பதை அவரவர் மனதுதான் தீர்மானிக்கிறது. எனவே நம்மைப் பற்றியே
நினைப்பதைத் தவிர்த்து, மற்றவர் சந்தோஷத்தையும் நினைக்க ஆரம்பித்தாலே, உங்கள் கவலைகள் மறையும்.பரு மாயமாகும். முடி கொட்டுவது நிற்கும். எல்லாமே இனிமையாக மாறும்.