Home பெண்கள் தாய்மை நலம் குழந்தைகளுக்கு பாலூட்டுவது பற்றி பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

குழந்தைகளுக்கு பாலூட்டுவது பற்றி பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

30

பாலூட்டுதல் என்பது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் சூழல்கள் அவற்றை சவாலானதான மாற்றிவிடுகின்றன.

நிறைய பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும்கூட பாலூட்டுவதைப் பற்றிய போதிய அறிவு இன்மையால் அதை ஏனோ தானோவென நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் குழந்தைக்கு பாலூட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

பிரசவம் முடிந்த ஒரு மணி நேரத்தில் நர்ஸிடம் சொல்லி, முதல் பாலை வெளியேற்றிவிடச் சொல்ல வேண்டும்.

பால் மிகக்குறைவாக ஊறுகிறது. பால் அதிகமாக ஊறுகிறதென்றால், ஓய்வான நேரத்தில் தேவையற்ற பாலை கைகளால் அழுத்தி வெளியேற்ற வேண்டியது அவசியம்.

அதோடு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வயிறு நிரம்பும் அளவு நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்கினால் பால் சுரப்பது அதிகமாகும்.

பாலூட்டுவதன் மூலம் குழந்தையுடனான தொடர்பும் பிணைப்பும் அதிகரிக்கும். உடல்ரீதியான இணைப்பு அதிகரிப்பதால், குழந்தைகளின் தேவையை தாயால் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

குழந்தை பிறந்த முதல் வாரத்தில் குழந்தை எல்லா நேரமும் பால் குடிக்க எத்தனிக்கும். ஏனெனில் அது அதிக பசியோடு இருப்பது மட்டுமல்லாமல், புதிய சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும்.

குழந்தை பால் குடித்துக் கொண்டிருகு்கும்போது அவசர அவசரமாக அடுத்த மார்பகத்துக்கு செல்லாதீர்கள். முதல் மார்பகத்தில் நன்கு போதும் என்கிற அளவுக்கு குடித்தபின், குழந்தை தானாகவே வாயை எடுத்துவிடும். அதன்பிறகு அடுத்த மார்பகத்தைக் காட்டினால் போதும். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் பற்றி தெரியாமல் தான் பெருமு்பாலான பெண்கள் தவறு செய்கிறார்கள்.