Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் இந்த உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீங்க .

குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் இந்த உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீங்க .

36

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அம்மாக்கள் பார்த்துப் பார்த்து சமைப்பார்கள். அம்மாவின் பக்குவத்தில் ஆரோக்கியமும் அன்பும் கலந்திருக்கும். ஆனால் ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பும் உணவுகள் மதிய நேரத்தில் குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கும்.

சில உணவுகள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அதனுடைய தன்மையை மாற்றிக் கொள்ளும். அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

பிரெட் & ஜாம்

குழந்தைகளுக்கு எந்த டென்ஷனும் இல்லாமல், மிக எளிதாக லஞ்ச் பாக்ஸில் அடைத்துக் கொடுக்கக்கூடிய உணவு என்றால் அது பிரெட்டும் ஜாமும் தான். நாம் பெரும்பாலும் ஓயிட் பிரெட்டைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒயிட் பிரட்டால் உடலுக்குக் கேடு தான் விளையுமே தவிர, நன்மைகள் ஏதுமில்லை.

ஒயிட் பிரட்டில் நார்ச்சத்து கிடையாது. பென்சாயில் பெராக்சைடு மற்றும் குளோரின் டை ஆக்சைடு ஆகியவை ஒயிட் பிரட்டில் மிக அதிகமாகக் கலக்கப்படுகின்றன. இவை குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.

சீஸ்

சீஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால் சீஸைப் பொருத்தவரையில் பதப்படுத்தப்பட்டதாக இருந்தால் அதைக் குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். பதப்படுத்துவதற்காக உப்பு மற்றும் வேறு சில வேதிப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும். அவை குழந்தைகளின் ஜீரணத்தன்மையைக் கெடுக்கும்.

பட்டர்

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பட்டர் ஃபிரெஷ் பட்டராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 2 முதல் 3 வாரங்களுக்கு மேல் பட்டரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. கடைகளில் விற்கும் லேசான மஞ்சள் நிற பட்டர்களில் உப்பு மற்றும் வேறு சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதனால் வீட்டிலேயே ஆரோக்கியமாக தயார் செய்யப்படும் ஒயிட் பட்டரை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பால்

சிலர் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு என்றால் பால் தான் என கண்ணை மூடிக்கொண்டு ஸ்கூலுக்கு லஞ்ச் பேகிலும் சிப்பரில் பாலை ஊற்றிக் கொடுத்தனுப்பி விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு கால்சியமும் மினரல்களும் ஊட்டச்சத்துகளும் அதிகமாகத் தேவை தான். ஆனால், பால் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், மிக விரைவாகவே திரிந்துவிடும். அது குழந்தைக்குத் தெரியாமலேயே குடித்துவிடும். அதனால் வாந்தி, பேதி ஆகியவை உண்டாகும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

அதனால் மேற்கண்ட உணவுகளை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் கொடுத்தனுப்பாமல் தவிர்ப்பது நல்லது.