Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு பசியின்மை

குழந்தைகளுக்கு பசியின்மை

50

”என் குழந்தை எதுவும் சாப்பிட மறுக்கிறது.” இந்தக் கவலை கிட்டத்தட்ட அனைத்து தாய்மார்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. சில அதிர்ஷ்டசாலிகளின் குழந்தைகள் நன்றாக சாப்பிடக்கூடியதாக இருக்கும், ஆனால் கண்பட்டுவிடும் எனக்கருதி அதனை அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

உங்களது குழந்தை சரியாக சாப்பிடவில்லை அல்லது சாப்பிடவே இல்லை என்றால் கவலை கொள்வது மிகவும் இயல்பான ஒன்றாகும். உங்களுக்கு அவர்களுக்கு போராடி உணவூட்டி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கலாம், எனினும் அவர்களுக்கு இயல்பாகவே உணவில் ஆர்வம் இருக்காது.

நீங்கள் உங்களது குழந்தை சரியாக சாப்பிட மறுப்பதை நினைத்து உங்களது அமைதியை இழக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் அவர்களது வளர்ந்து வரும் ஆண்டுகளில் உணவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது மிகவும் சாதாரணமானதாகும். உங்கள் குழந்தை எவ்வளவு சாப்பிட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்தளவு சாப்பிடவில்லை என்பதற்காக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை உங்களது குழந்தை அதுவாகவே சாப்பிடும் சாதாரண அளவை விட குறைவாக சாப்பிட்டு எடை குறைந்தால், உங்களது குழந்தைகள் நல மருத்துவரைச் சந்தித்து அதற்கு வேறு ஏதேனும் அடிப்படை மருத்துவ காரணங்கள் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் உணவு முறையில் சில விஷயங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கலாம்.  உங்கள் விஷயத்தில் பின்வருவனவற்றில் எவை உண்மையானதாக இருக்கின்றன எனப்படித்துப் பாருங்கள்:

ஜங்க் வகை உணவு: உங்களது குழந்தை மெல் சில்லுகள், மிட்டாய்கள், குக்கீகள், பழச்சாறுகள் மற்றும் மற்ற ஆரோக்கியமற்ற வகை மாற்று உணவுகளை உண்டு தனது வயிற்றை நிரப்புகிறதா? ஆம் எனில், நீங்கள் இதனை சரிபார்க்க வேண்டும். உங்களது குழந்தை ஜங்க் வகை உணவுகளை உண்டு அதன் சிறிய வயிறு நிரம்பி விட்டால், பின்னர் அதற்கு உண்பதற்கு வயிற்றில் இடமோ ஆர்வமோ இருக்காது.
மூன்று வேளை முழுமையான முழு உணவுகள்: நீங்கள் உங்களது குழந்தை முழுமையான எண்ணெய் நிறைந்த உணவை உண்ணும் என நம்புகிறீர்களா? உங்களது குழந்தை முழுமையான எண்ணெய் நிறைந்த உணவை உண்டால் வயிறு முற்றிலும் நிரம்பிவிட்டதாக நினைக்கும், இதனால் அதற்கடுத்த வேளை உணவை அது முற்றிலும் மறுக்கக்கூடும். மேலும் நீங்கள் உங்களது குழந்தை சராசரியாக பருகும் பாலின் அளவையும் கூட குறைக்க வேண்டும்.
சோம்பேறித்தனம்: இந்த தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலானவை ஸ்மார்ட்போன்களையும் டேப்லட்டுகளையும் பயன்படுத்துகின்றன. அவர்கள் எந்த சம்பதமும் இன்றி நீண்ட நேரம் டேப்லட்டுகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கின்றனர். உண்மையில் குறைவான உடலியக்க நடவடிக்கைகள், குறைவாக சாப்பிடுவதற்கு நேரடியாக தொடர்பு கொண்டவை. மேலும், உங்களது குழந்தை உடலியக்க நடவடிக்கைகளில் ஈடுபடாத போது, அது நிச்சயமாக பசியின்மையை மேம்படுத்தி சரி செய்ய நல்ல அறிகுறி அல்ல.
உங்களது குழந்தை சாப்பிட விருப்பமில்லாமல் இருப்பதில் பங்குவகிக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:

உடல்நலமின்மை: உங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அது சாப்பிடாது. உடல்நிலை சரியில்லாத போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் கொல்லிகளும் கூட அவர்களுக்கு பசியின்மை ஏற்பட வழிவகுக்கும். அதற்கு உடல்நிலை சரியான பிறகு, நன்றாக சாப்பிட ஆரம்பித்துவிடும்.
உடலமைப்பு மற்றும் பசியின்மை: சில குழந்தைகள் ஒல்லியான மற்றும் சிறிய உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய குழதைகளை அதிகம் சாப்பிட வைத்து நீங்கள் மாற்ற முடியாது. அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமெனில், சத்தான உணவைத் தரவேண்டும், மேலும் அது அவர்களுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஏதேனும் சுதாதாரப்பிரச்சினைகள் இருந்தால் உங்கள குழந்தைகள் நல மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.
சலிப்பூட்டும் உணவுகள்: நீங்கள் விதவிதமான வகைகளில் உணவு தரவில்லை என்றால் உங்கள் குழந்தை எளிதில் சலிப்படைந்துவிடும். அவர்களுக்கு வெவ்வேறு வகையான உணவு மற்றும் பழங்களைப் பரிமாறுங்கள். அவர்களுக்கு உணவின் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் ஏதேனும் மாறுபட்ட உணவுகளை முயற்சித்து தயாரிக்கவும்.
பலவந்தமான உணவூட்டல்: உங்களது குழந்தை ஏன் சாப்பிட மறுக்கிறது என உங்களால் கண்டறிய முடியவில்லை எனில், நீங்கள் அவர்களுக்கு பலவந்தமாக உணவூட்டக்கூடும். இத்தகைய நடவடிக்கை பிரச்சினையை மேலும் மோசமாக்கி விடும், உங்களது குழந்தை உணவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளும்.
புழுக்கள் மற்றும் மலச்சிக்கல்: புழுக்கள் மற்றும் மலச்சிக்கல் இரண்டுமே பசியின்மைக்கு வழிவகுத்து விடக்கூடியவை. நீங்கள் முதலில் அதனை கவனிக்க வேண்டும்.
இரத்த சோகை: சில சந்தர்ப்பங்களில் குழந்தைக்கு குறைவான இரும்புச்சத்து இருக்கலாம். இது குழந்தைகள் மத்தியில் குறைவான வளர்ச்சி, எரிச்சல் உணர்வு மற்றும் சோர்வு ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்றாகிறது. சிகிச்சை அளிக்காமல் இருந்தால், இரத்தசோகையானது வளர்ச்சி தொடர்பான எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.
நன்றாக சாப்பிட உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்.

உங்களது குழந்தை மந்திரம் போட்டது போல ஆரோக்கியமாக மற்றும் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடாது. நீங்கள் பொறுமையாக இருந்து, அவர்கள் சாப்பிட உதவ வேண்டும்.

நீங்கள் முடிந்த வரை அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கற்பிக்க முயற்சியுங்கள். அவர்கள் ஜங்க் உணவுகளைச் சாப்பிடுவதற்கு பதிலாக பழங்களை சிற்றுண்டியாக உண்ணட்டும்.
உணவு உண்பதை அதிகாரப் போராட்டமாக உட்படுத்தாதீர்கள். அவர்களை கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பதில் எந்த பிரயோஜனமும் இருக்காது.
உணவில் பரிசோதனை செய்து பாருங்கள், புதிய சமையல் குறிப்புகளை முயற்சித்து பாருங்கள். உங்களது குழந்தையின் சுவை அரும்புகள் தொடர்ந்து வளரும்.
அவர்களுக்கான உணவை சிறிது சிறிது அளவாக தொடர் இடைவெளிகளில் வழங்க வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
அவர்களை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க விடுங்கள். மின்னணு கருவிகளை குறிப்பிட்ட நேர வரம்புக்குள் மட்டும் அவர்கள் பயன்படுத்த அனுமதியுங்கள்.
அவர்களை மகிழ்ச்சியான மற்றும் இனிமையான சூழலில் சாப்பிட வையுங்கள்.
உணவு மற்றும் சாப்பிடுதல் எப்போதும் தேவையற்ற ஒரு விவாதத் தலைப்பாக இருக்கவே கூடாது.
அவர்களை மளிகைக் கடைக்கு அழைத்துச்செல்லுங்கள், அத்துடன் உணவு தயாரிப்பிலும் கூட அவர்களை உதவச் சொல்லுங்கள்.
இந்த குறிப்புகள் அனைத்தும் விளைவுகளைத் தர சில காலம் பிடிக்கும். உங்களது தாய்மை உணர்வு உங்களுக்கு வேறு ஏதேனும் உணர்த்தினால், உங்களது குழந்தைகள் நல மருத்துவரைக் கலந்தாலோசித்து அதனை சரி செய்யுங்கள்.