Home குழந்தை நலம் உங்கள் குழந்தையின் சருமம் பட்டுபோல் மின்ன வேண்டுமா?

உங்கள் குழந்தையின் சருமம் பட்டுபோல் மின்ன வேண்டுமா?

29

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையிலான உறவு இணைப்பை வலுப்படுத்த உதவும் கருவியாக மசாஜைக் கருதலாம். தாய் குழந்தைக்கு மசாஜ் செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. அவை, குழந்தைகளுக்கு இதமாக இருக்கும். தினமும் மசாஜ் செய்து குளிக்க வைத்தால் குழந்தை அடிக்கடி அழுவது குறையும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயுத் தொல்லை, சளித்தொல்லை

நீங்கும்.

ஆயில் மசாஜ் தொடர்ந்து செய்வதால் உடல் எடை அதிகரிக்கும்.

பகலில் மசாஜ் செய்து குளிக்க வைத்தால் இரவில் குழந்தைக்கு நன்றாகத்

தூக்கம் வரும்

எப்போது தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் உண்டாகும்.

மூக்கு மற்றும் பல் தொடர்பான பிரச்னைகள் வராது

சருமத்தின் நிறம் கூடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் சரியான

அளவில் கிடைக்கும்.

ஆயில் மசாஜ் மூலம் உடலின் தசைகள் தூண்டப்படுவதால் உணர்வுகளைப்

புரிந்து கொள்ளும் திறன் வளர்கிறது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஆயில் மசாஜ் சருமத்தைப் பளபளக்கச் செய்யும்

இவையெல்லாம் குழந்தைக்கு உண்டாகும் நன்மைகள். அதேசமயம்

குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வதால், தாய்க்கு குழந்தையைக்

கையாள்வது எளிமையாக இருக்கும்.