உங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா?? உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்க…
குழந்தைகளின் தவறான பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இல்லாவிட்டால், அது அக்குழந்தையின் ஆரோக்கியத்தையே பாழாக்கிவிடும். குறிப்பாக குழந்தைகள் உட்காரும் போது, அவர்கள் உட்காரும் நிலையைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகள் தவறான நிலையில் அமர்வார்கள். அதுவும் சில குழந்தைகள் W வடிவில் கால்களை வைத்து உட்கார்வார்கள். இது மிகவும் மோசமான நிலை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ஏன் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
‘W’ வடிவம் குழந்தைகள் அமரும் போது, அடிக்கடி ‘W’ வடிவில் உட்கார்ந்து, பல மணிநேரம் இந்நிலையிலேயே அமர்ந்து விளையாடினால், அதை உடனே மாற்ற வேண்டும். ஏனெனில் இந்த நிலை குழந்தையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
எலும்பு பிரச்சனை குழந்தைகள் எப்போதும் ‘W’ வடிவில் உட்கார்ந்தால், அது குழந்தையின் உள் இடுப்பு சுழற்சி மற்றும் தீவிர எலும்பியல் பிரச்சனைகளை உருவாக்கும்.
தசை சிதைவு குழந்தைகளின் இம்மாதிரியான உட்காரும் பழக்கம், தசைகளை சிதைவுறச் செய்வதோடு, சுருங்கவும் செய்து, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.
இதர விளைவு இந்த நிலையில் அமர்ந்தால், உடலின் ஈர்ப்பு மையம் அதிகப்படியான புவி ஈர்ப்பு விசையின் விளைவால், உடற்பகுதியில் உள்ள தசைகளால் உடலை சமநிலையில் பராமரிக்க முடியாமல் செய்துவிடும்.
தடுக்கும் வழி குழந்தைகளுக்கு இம்மாதிரியான மோசமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் ‘W’ வடிவில் அமரும் பழக்கத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் அமரும் போது, அந்நிலையில் அமர்வதைத் தடுத்து, கால்களை நீட்டியோ அல்லது கால்களை மடக்கியோ அமர்த்த முயற்சி செய்யுங்கள்.