Home சமையல் குறிப்புகள் அருமையான ருசியில் தேங்காய்ப்பால் கோழிக்கறி குழம்பு

அருமையான ருசியில் தேங்காய்ப்பால் கோழிக்கறி குழம்பு

41

தேங்காய்ப்பால் கோழிக்கறி ஒரு மகாராஷ்டிரீய உணவு வகையைச் சார்ந்தது. இது செய்வது சுலபம், சுவையும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1/2 கிலோ
கருவேப்பிலை
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – அழகுப்படுத்த
தண்ணீர் -சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் – 1
தேங்காயப்பால் – 1/2 கப்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
பேசன் ( கடலை மாவு) – 1/4 கப்
சிக்கன் மசாலா
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலை மாவை இட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறத்த கடலை மாவு, சிளிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக கலந்து கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிக்கன் மசாலா, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை இட்டு கலந்து வைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன், கோழிக்கறியைச் சேர்த்து ஒரு கிளறி விட்டு கடாயை மூடி வைத்து வேக வைக்கவும்.

பிறகு, கடாய் மூடியை எடுத்துவிட்டு தேங்காய்ப்பாலை ச் சேர்த்து கிளறி விடவும். அதன் மேலாக கடலை மாவு,தண்ணீர் சேர்த்து கலந்து வைத்த மாவி தண்ணீரை மேலாக ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கறி வெந்தும் நல்ல மசாலா வாசனையுடன் அடுப்பை அணைக்கலாம்.

தேங்காய்ப்பால் கோழிக்கறி ரெடி!

தேங்காய்ப்பால் கோழிக்கறி குழம்பை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.