Home காமசூத்ரா காமசூத்திராவை அறிந்திருக்க வேண்டும்” என்கிறார் வாத்ஸ்யாயனர்.

காமசூத்திராவை அறிந்திருக்க வேண்டும்” என்கிறார் வாத்ஸ்யாயனர்.

31

வாத்ஸாயனரின் காமசாஸ்திரம்…பக்குவம் பெற படியுங்கள்…இந்த ஆவணப்பதிப்பில் உள்ள பலகருத்துக்கள் நன்மையையும்..அதே வேளை மதசார்பு மூட நிலைகளையும் பரப்பி நிற்கிறது… இது அறிவுசார் நிலையையும்..அறியாமைத் தனத்தையும்.. அவசரப் போக்கையும்..விரிவாகவும்…விளக்கமாகவும் எடுத்து விளக்கியுள்ளது எனவே ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் இதை படித்தறியப்பட வேண்டிய ஒன்று.. இதை படித்து முடிக்கும் போது ஒரு தெளிவு நிலை வரும்.. உங்கள் காரசாரமான வாத பிரதி வாதங்களையும் கருத்துகளையும் வையுங்கள்.. இது சாதரண மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் நெறிபடுத்துவதாகவும் உள்ளது. இப்போ தொடருக்குள் நுழைவோம்…

* தர்மமே அனைத்துக்கும் மூலம். தர்மத்திலிருந்து அர்த்தம் வளர்ச்சியுற்றது காமம் மலர்ச்சி கண்டது. ஓர் இந்துவின்வாழ்கை முறை இம்மூன்றையும் குறிக்கோள்களாய் கொண்டு இயங்கும்.தர்மம் என்பது ஆன்மிக மற்றும் நெறி சார்ந்த கடமைகள். அர்த்தம் என்பது இகழ்வாழ்விற்க்கான பொருள்களும். அறிவும் பெறுதல். காமம் என்பது புலன்களின் இன்பம்.
* இந்த உலகத்தை படைத்தவர் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா என்றும் அறியப்பட்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தர்மம், அர்த்தம், காமத்தைக்கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவர் இலட்சம் பாடல்களில் விவரித்திருக்கிறார்.
* நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவர் தர்ம உபதேசங்களைச் செய்தார். அதுவே மனுநீதி என்பது. அர்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினார். நந்தி பகவான் காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தார்.
* உத்தலாகரின் மகனான ஸ்வேதகேது காமசூத்திரத்தை ஜநூறு அத்தியாயங்களில் உரைத்தார் பாப்ரவ்யர் அந்த ஞானத்தை நூற்று ஜம்பது அந்தியாயங்களில் சுருக்கித் தந்தார். அவை ஏழு தனி தனி தலைப்புக்களில் வகைப்படுத்தப்பட்டன.
* தியானம், உடலுறவு, காதல், திருமணம், கள்ள உறவு, விலைமகளிர் மற்றும் மோக ஊக்கிகள் ஆகியவை அந்த ஏழுமாகும்.
* ஒரு கட்டத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலும் அவன் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நேரத்திற்கு ஒன்று என வைத்து கொண்டால தானே எதையும் உருப்படியாக செய்ய முடியும். அவன் தன்னுடைய சிறுவயதில் அந்த பாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
* இளமையில் காமத்தையும். முதுமையில் தர்மத்தையும் அனுசரிக்க வேண்டும். இந்த அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்ஸ்யாயனர் மாற்றினார். தர்மம், அர்த்தம், காமம் இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம். முடிந்த விதத்தில் எல்லாம் செய்யலாம் என்கின்றார்.
* தர்மம் என்பது வேதத்தில் விதித்தபடி நடப்பது. உதரணமாக புலால் மறுப்பு, யக்ஞம், யோக சாஸ்திரம் பயிலல் மிகச் சிறந்த குருமார்களை அண்டியிருத்தல், அர்த்தம் என்பது கல்வி, வீடு, நிலம், தானியம், கால்நடை, ஆபரணங்கள், ஆடைகள், நண்பர்கள், கலைகள், செல்வம்சேர்த்தல் பற்றியதாகும்.
* காமம் என்பது உடல், மனம், ஆன்மா ஆனுபவிக்கிற மகிழ்ச்சி. இது ஒரு நுட்ப்பமான உணர்வு கண்கள், நாசி, நாக்கு, செவிகள், சருமம், இவற்றை விழிப்படையச் செய்யும் உணர்வதற்க்கும் உணரப்படுவதற்க்கும் இடையில் காமம் முகழ்கிறது.
* தர்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தர்மத்தை முதலிலும் தர்மத்துக்கு பின் அர்த்தத்தையும், அர்த்தத்துக்குபின் காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும்.
* அர்த்தம் – புற வாழ்க்கை காமம் – அக வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

அது ஒரு மாபெரும்ட சக்தி காதல் செய்வது உயிரியற்கை என்கிறபோது அதைச் சொல்வதற்க்கு ஒரு நூலும் தேவையா என்பது சிலரின் கருத்து. விலங்கு உடலுறவு கொள்கிறது. மனிதனும் உடலுறவு கொள்கிறான். இரண்டும் ஒன்றாகிவிடுமா..? விலங்கு தனது இரையை அப்படியே உண்கிறது. மனிதனுக்கோ பக்குவம் தேவைப்படுகிறது. அதனால் தானே அவன் உயிரினங்களில் முதலிடம் வகிக்கிறான். அவனுக்கு உடலிறவிலும் பக்குவம் தேவை. அதனால் தான் காமநூல் அவசியப் படுகிறது. அச்சமும், தயக்கமும் கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ”காமநூல்கள் மருட்சியை ஏற்ப’;படுத்தலாம்” ஆனால் இந்த நூல்களை அவர்கள் அச்சத்திலிருந்தும் தயக்கத்திலிழருந்தும் விடுவிக்கும் காமம் சக்தி வாய்ந்தது. அது கற்றவர்களை காதலில் தேர்ச்சி உடையவராக்கும். மற்றவர்களை பொறுத்தவரை ”மண வாழ்க்கையை நாசம் செய்யும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். காமம்-விலங்குகள் உலகில் வெறும் பாலுணர்வு வேட்க்கை, மனிதர்கள் வாழ்வில் அது ஒரு யோக சாதனை, காம துறவிகள் விலக்கலாம். ”சம்சாரிக்கு அது முடியாது. சுகத்தை தேடுகிறவன் பாவங்கள் செய்யும்படியாகும். குற்றங்களை புரியும்படி இருக்கும் என்பது மகான்களின் கருத்து. காமவாய்ப்பட்டவன் தன் குடும்பத்தை தானே நாசம் செய்து விடுவான் என்று அவர்கள் கருதினார்கள். போஜர்குல மன்னன் தாண்டக்யன் ஒரு மேல்யாதிப் பெண்ணை கற்ப்பழித்துவிட அதன்விளைவாக அவன் செத்துப் போனான். அவனுடைய நாடு புழுதி காற்றில் காணமல் போயிற்று என்று புரணங்கள் கூறும். ”இந்திரன் அகலிகையை ஏமாற்றினான். சீசகன் திரளெபதியை இழிவு செய்தான். ராவணன் சீதையை தூக்கி சென்றான். இப்படி தங்கள் பலத்தையும் பிரக்யாதியையும் நம்பிச் செயல் பட்டவர்களெல்லாம் அழிந்து பட்டார்கள். காமம் அவர்கள் கண்ணை மறைத்தது என்பார்கள். காமம் கெடுதல் செய்வதில்லை. மனிதனிடம் உள்ள தீய பண்புகள் தான் அவனையும் கெடுக்கின்றன. அவனை சற்றியள்ளவர்களையும் கெடுக்கின்றன. உடலுறவு முக்கியம், உடம்புக்கு உணவு, தண்ணீர் மாதரி உடலுறவு அவசியப்படுகிறது. காமம் என்பது அர்த்தம். தர்மம் இவற்றின் விளைவு பலன் என்கிறார்” வாத்ஸ்யாயனர். அச்சம் பாலுறவுக்கு இடையுறாகி விடக்கூடாது. ” கால் நடைகள் பயிரை மேய்ந்து விடும் என்பதற்காக விவசாயம் செய்யாமல் இருக்க முடியுமா..?” பிச்சைக்காரனுக்கு பயந்து சமைப்பதை நிறுத்திவிடலாமா..? என்று கேட்க்கிறார் வாத்ஸ்யாயனா. அர்த்தம், காமம், தர்மம் இவற்றை அறிந்தவனும் தனது உடம்பு, மனம், ஆன்மாவில் அவற்றை கடைபிடிக்கிறவனும் இவ்வுலகத்தோடு மறுவுலகிலும் மகிழ்ச்சியாயிருப்பார். இளைஞர்கள் கலைகள், அறிவியல் கற்பதுடன் தர்மம், அர்த்தம், காமம், பற்றிய நூல்களையும்கற்று தோச்சி பெற வேண்டும். ”முதலிரவை எதிர் நோக்கியிருக்கும் மணப்பெண் காமசூத்திராவை அறிந்திருக்க வேண்டும்” என்கிறார் வாத்ஸ்யாயனர்.