Home இரகசியகேள்வி-பதில் செக்ஸ்’ போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

செக்ஸ்’ போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

39

அன்புள்ள அக்காவுக்கு —

என் வயது, 30; என் எதிர் வீட்டில் குடியிருக்கும் அவருக்கு வயது, 40. எங்கள் இருவருக்குமே திரு மணமாகி, குழந்தைகள் உள்ள னர். நாங்கள், 12 வருடமாக எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறோம். எங் களுக்குள் எந்த விதமான பழக்க மும் இல்லை. சென்ற இரண்டு வருடத்திற்குமுன், ஒருநாள், ஜன் னல் வழியாக என்னை பார்த்து சிரித்தார். அதன்பின், அதேபோல் இரண்டு அல்லது
மூன்று முறை நடந்திருக்கும்.
அதன் பின், எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. தின மும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொ ள்கிறோம். சில சமயம், அவர், என் னை பத்து நாள் கூட பார்க்காமல் இ ருப்பார். என்னால் ஒருநாள் கூட அவ ரைப் பார்க்காமல் இருக்க முடியாது; துடித்துப் போய் விடுவேன்.
இதுவரையில், பார்வையால் மட்டுமே பேசிக் கொண்டோமே ஒழிய, எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும், என்னால் அவரை மறக்கமுடியவில் லை. அவரை மறக்க வேண்டும் என்பதற்காகவே யோகா செய் கிறேன். இருந்தாலும், தூங்கி எழுந்தவுடன் அவர் முகம் தான், நினைவிற்கு வருகிறது.
இவர் ஞாபகமாகவே இருப்பதா ல், என்னால், யாரிடமும் அன்பா க இருக்க முடியவில்லை. ஆ னால், அவர் மிக இயல்பாகவே நடந்து கொள்கிறார். என்னால் தான் அப்படி இருக்க முடியவி ல்லை. தயவு செய்து, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
அன்புடன்
சகோதரி.

அன்பு சகோதரிக்கு —

திருமணம் முடிந்து, வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்த போதிலு ம், உனக்கு எதிர் வீட்டு ஆணின் மேல் காதல். அவரை மறக்க முடிய வில்லை என்று புலம்புகிறாய்.
உன் எதிர்வீட்டு ஆணிடம், உனக்கு பிடித்த நபரின் சாயலை, அணு குமுறையை கவனித்து, அதனால், நீ மகிழ்ச்சியடைந்திருக்கலாம். இதில், ‘உடல் உறவு, செக்ஸ்’ போன்ற விஷயங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல் லை.
‘எந்த தவறும் செய்யவில்லை… ஆ னாலும், அவரை மறக்க முடியவில் லை…’ என்று, ஆதங்கப்பட்டு எழுதியி ருக்கிறாய்.
நன்றாக காற்று அடித்த பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமுக் கினாலும், அது வெளியே வரத் தானே செய்யும். நீ எவ்வளவு அழு த்தம் கொடுத்து அமுக்குகிறா யோ அதே அளவு, அதிக சக்தியுட ன் வெளியே நீரை கிழித்துக் கொ ண்டுதான் வரும். பிரச்னையின் அடிப்படைக் காரணத்தை கண்டு பிடிக்கும் வரை, மீண்டும் மீண் டும் உனக்கு தொல்லை தரத்தான் செய்யும்.
‘அவர் மிகவும் இயல்பாக இருக்கி றார்… அவர் நினைவால் இருக்கு ம் எனக்குத்தான் யாரிடமும் அன் பாக இருக்க முடியவில்லை…’ எ ன்று கூறியிருக்கிறாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றா ல், நீ மாத்திரம் ஒருதலைப் பட்சமாக அன்பு செலுத்திக் கொண்டி ருக்கிறாய். எனவே, இதை, பிரச்னை என்று நினைப்பதும், நினை க்காமல் இருப்பதும் உன் கையில் தான் இருக் கிறது.
‘நிலங்களை உழுவது போல் உள்ளத் தை உழுங்கள்’ என்று, மனிதர்களுக் கு ஏசு பிரான் கூறுகிறார். நீ, தனியாக அமர்ந்து, உன் எண் ணம் சரிதானா… பக்கத்து வீட்டு ஆணின் பார்வைக்கு நீ ஏங்குவ தைப் போல், உன் கணவன், அடுத்த வீட்டுப் பெண்ணின் பார்வைக்கு ஏங்கி, குடும்ப கடமையை மறந்து தவித்துக் கொண் டிருந் தால், உன் மன நிலை எப்படியிருக்கும் என்பதை, உனக்கு நீயே சுயபரிசோதனை செய்.
நடைமுறைக்கு ஒத்து வருகிற நினைப்பு, செயல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, நடைமுறைக்கு ஒத்து வராத செயல்களை தவிர்க்க முயற்சி செய்.
வாழ்வியல் நீதி கருத்துள்ள புத்தகங்களை படி; நீ படித்ததில் உள்ள நல்ல விஷயங்களை பிள்ளைகளிடமும், கணவனி டமும் பகிர்ந்து கொள்; தமக்கு கிடைத்தது எதுவோ, அதை வைத்து திரு ப்தி கொள்ளவும், அதில் சந்தோஷம் காணத் தெ ரிந்தவர்களே வா ழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள். நீ, உனக்கு கிடைத்த வாழ்க் கையை, உனக்கு மட்டுமே சொந்தமான உறவுகளை நேசி; விட்டு க் கொடு; அதில் சந்தோஷம் கொள். அதை விடுத்து, பக்கத் து வீட்டு ஆணின் பார்வையை நினைத்து, பாயைப் பிராண்டி, உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொள்ளாதே…
ரொம்பவும் கஷ்டமாக இருக் கிறது… தாங்க முடியவில்லை என் று நினைக்கும் பட்சத்தில் திறமையான உளவியல் நிபு ணர்களையோ, மனநல மருத் துவரையோ சந்திக்கலாம். அ வர்கள் ‘ஹிப்னா சிஸ்’ அல்ல து ‘பிகேவியர் தெரபி’ போன்ற நவீன சைக்கோ சிகிச்சை மு றைகள் மூலம் பிரச்னைகளு க்கு தீர்வு தரலாம்.
எஞ்சியிருக்கும் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கவும், ஆ டிக் காற்றில் அம்மி பறப்பது போல உன் அனைத்துப் பிரச் னைகளும் பறந்து, நிம்மதியா ன வாழ்க்கை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

திருமணம் ஆகி குழந்தை இல்லையா?முதலில் செக்ஸ் பழகுங்க !

திருமணம் ஆகி குழந்தை இல்லையா?முதலில் செக்ஸ் மருத்துவரை பாருங்கள் .ஆரம்பத்திலேயே குழந்தை பேறு சிறப்பு மருத்துவரை பின்னர் பார்க்கலாம் .குழந்தை பெற செக்ஸ் அவசியம்.அதை முதலில் பழகுங்கள்.மனிதனின் வாழ்க்கை சிறக்க மனம் அமைதி வேண்டும்.அந்த அமைதியை நாடி எங்கு சென்றாலும் நிரந்தரமில்லாத ஒரு அமைதிதான் கிடைகிறது. இதற்க்குக் காரணம் நாம் அதன் விஞ்ஞான காரணம் அறியாததுதான் .மெய்ஞானமும் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து கிடைப்பின் அது நிரந்தரம் .இதை கண்டவர் சொல்வதில்லை .சொல்பவர் பூரணமாக கண்டுள்ளனரா என்பது ஆராய்ந்து அறிய வேண்டிய ஒன்று. அதை ஆராயாமல் பலர் தன வாழ்நாளை வீண் செய்வதை பார்க்கிறோம் .இந்த பொன்னான வாழ்வை சிறப்பாக்க உங்களுக்கு தேவை அறிவுபூர்வமான பகுத்தறிவு. அதை தர வல்லது இந்த சிகிச்சைகள் .நம் ESP என்னும் அபூர்வ சக்தியை பயன்படுத்த ஆரம்பித்தோமானால் உலகின் சிறப்புக்களை பெற எந்த தடையும் நமக்கு இருக்காது.
வாருங்கள் .உங்கள் உள்ளே இருக்கும் மனித சக்தியை உணர்ந்து உபயோகிக்க பழகுங்கள்.