Home இரகசியகேள்வி-பதில் டாக்டர் தெளிவுபடுத்தும் அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு

டாக்டர் தெளிவுபடுத்தும் அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு

268

இல்வாழ்வில் முக்கிய அங்கமான ஹனிமூனின் தேவைப்பாடு?

புதிய திருமண ஜோடியின் முதல் சுற்றுலா பயணத்தை தான் ஹனிமூன் அல்லது தேன்நிலவு என்று சொல்கிறோம். அந்த ஜோடி உல்லாசமாக இருக்க அளிக்கப்படும் சில நாட்கள் தான் அது.

முன்பெல்லாம் ஹனிமன்த் (Honey Month) என்ற பெயரில் ஒரு வழக்கம் உண்டு. அதுவே இப்போது ஹனிமூனாக மாறியதாம். டியூட்டன் இன மக்கள் திருமணமான ஜோடிக்கு 30 நாட்களுக்கு தேன் கொடுப்பார்கள். இந்த 30 நாட்கள் தான் ஹனிமன்த் என்று சொல்லப்படுகிறது.

தேனுக்கும் திருமணத்துக்கும் சில நாடுகளில் முக்கியமான பிணைப்பு இருக்கிறது. எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான் என நீளும் அந்த நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது.

கல்யாணமானதும் ஒரே கிண்ணத்தில் மணப்பெண்ணும் மணமகனும் தேன் பருகுவது ஐரோப்பிய நாடுகளில் வழக்கம். மணமகளின் வீட்டில் உள்ள கதவுகளில் தேன் தெளிப்பது கிரேக்கத்தில் வழக்கம். ருமேனியர்கள் மணபெண்ணின் உடல் முழுவதும் தேன் தடவி முதலிரவுக்கு அனுப்புவார்கள். மணப்பெண் முதல் முறையாக புகுந்த வீட்டுக்கு வரும்போது ஒரு கிண்ணத்தில் தேன் கொடுத்து பருக வைப்பது துருக்கியில் பின்பற்றப்படுகிறது. போலந்தில் மணப்பெண் உதட்டில் தேன் பூசி, அதை மணமகன் சுவைப்பது ஒரு சடங்காக உள்ளது.

தேனில் தோய்த்த உணவுப் பண்டங்களை மணமக்களுக்குக் கொடுப்பது பல நாடுகளில் இருக்கிற பழக்கம். சீனாவில் ஒரு கிண்ணத்தில் உள்ள தேனை மணமக்கள் மாறி மாறி பருகுவார்கள்.

இப்படி தேனுக்கும் திருமணத்துக்கும் உலகில் பல நாடுகளிலும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் புதிதாகத் திருமணமான ஜோடி செல்கிற முதல் சுற்றுலாப் பயணத்தை ஹனிமூன் என்ற பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

———————

கேள்வி:
எனக்கு வயது 24. நான் ஒரு ஆண். சிறு வயது முதலே எனக்கு யோசனையும் மன அழுத்தமும் அதிகமாக இருந்து வருகிறது. சிறு தவறு என்றாலும் மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வீதியில் விழுந்து தூங்கிவிட்டேன்.

போதையில் இருந்த என்னை ஒருவர் வந்து எழுப்பி அழைத்துச் சென்­றார். அவர் எனக்குத் தெரிந்தவரோ, நான் தங்கியிருக்கும் விடு­திக்குத்தான் அழைத்துச் செல்கிறாரோ என்ற எண்ணத்தில் அவருடன் தட்டுத் தடு­மாறி எழுந்து சென்றேன். அவர் என்னை ஒரு மறைவிடத்துக்கு அழைத்­­துச் சென்று என்னை துஷ்­பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார். சுதாகரித்துக்கொண்ட நான், அவரைத் தாக்க முற்பட்டேன். அவர் பயந்து ஓடிப் போய்விட்டார். பிரச்சினை என்னவென்றால், அந்த இடத்தில் கண்காணிப்பு கெமரா பொருத்­தப்பட்டிருந்தது.

அதில் இச்­சம்ப­வம் பதிவாகியிருக்குமோ என்று பயமாக இருக்கிறது. அப்படிப் பதிவாகி­யிருந்தால் அதை இணையத்­தில் கசிய விட்டுவிட்டால் என் மானம் கப்ப­லேறி­விடும். தற்கொலை செய்து­­கொள்ள­லாம் என்றால், எனக்கு இளைய சகோதர, சகோதரிகள் இருக்­கின்ற­னர். அவர்களுக்காகவேனும் உயிர் வாழ வேண்டும். இச்சம்பவம் நடந்து ஒன்­றரை வருடங்கள் ஆகின்­றன. எனக்கு தகுந்த ஆலோசனை தர வேண்டும்.

பதில்:
போய் வேலையைப் பாருங்கள்!
சிறு வயது முதலே சிறு தவறு என்றாலும் உறுத்தும் மனப்பாங்கு கொண்ட உங்களுக்கு, குடிப்பழக்கம் தவறு என்பது மட்டும் ஏன் உறுத்தவில்லை என்று வியப்பாக இருக்கிறது. போகட்டும்!

உங்கள் விலாவாரியான கடிதத்தில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் தரவேற்றும் அளவுக்கு ‘தகுதி’ வாய்ந்தது அல்ல! அதனால்தான் சம்பவம் இடம்பெற்று ஒன்றரை வருடங்களாகியும் அது இணைய உலா வரவில்லை.
எதெதெற்கு தற்கொலை செய்துகொள்ள நினைப்பது என்ற ஒரு வரையறை இல்லாமல் போய்விட்டது. தற்கொலைக்கு இருந்த ‘மதிப்பும்’ உங்களால் போய்விட்டது.
அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், பிர­பல புள்ளிகள் எனப் பல்­வேறுபட்டவர்கள் பாலி­யல் நட­வடிக்கைகளில் ஈடு­பட்ட காட்சிகள் இணையத்­தில் பல கோடி மக்களால் பார்க்கப்­பட்டிருக்கின்றன. அவர்க­ளெல்­லாம் தற்கொலையா செய்து­கொண்­டார்கள்?

உங்களுக்கு இடம்பெற்றது ஒரு விபத்து. இதில் இருந்து நீங்கள் கற்றுக்­கொள்ள வேண்டியது என்னவென்றால், இச்சம்பவத்துக்கு மூல காரணமான குடிப்பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்­டும் என்று உறுதி­யெடுப்­பதே! அதன் மூலம், உங்கள் இளைய சகோதரங்­களுக்­குத் தேவையான வசதிகளைச் செய்து­கொடுக்கலாம். அல்லது உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு – அதாவது, திருமண வாழ்க்கைக்கு – தேவையான பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மீறியும் ‘தற்கொலை செய்துகொள்­ளத்­தான் போகிறேன்’ என்று நீங்கள் நினைப்­பீர்களானால்… அதற்­காகத் தனியாக முயற்சி செய்யத் தேவை­யில்லை. ஏனெனில், குடிப்பழக்கமே ஒரு தற்கொலை முயற்சிதான்!

————————————————–
மாதத்தில் எத்தனை முறை ஈடுபடுவது?

திருமணமான புதிதில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் உடலுறவைத் தொடங்குவார்கள். அப்போது மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். அதற்கடுத்து சிறிதுகாலம் போகப்போக வேலைப்பளு, குடும்பப் பொறுப்பு என பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் ஒரு நாளைக்கு குறைந்தது எத்தனை முறை வரை உறவு கொள்ளலாம்? எத்தனை உறவு கொண்டால் இன்பமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பதை ஆணும் பெண்ணும் தெரிந்து கொண்டு செயல்பட்டாலே போதும், வாழ்க்கை இனிமையாகும்

ஒரு மாதத்துக்கு குறைந்தது 11 முறை உடலுறுவு கொள்வது நல்லது. 11 முறை என்பது குறைந்தபட்சம் தான்.

திருமணமான முதல் இரண்டு வருடங்கள் வரை தம்பதிகள் அதிகமுறை உறவு கொள்கிறார்கள். பின்பு அதில் நாட்டம் குறைந்துவிடுகிறது.

இந்த 11 முறைக்கும் குறைவாக ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது, இருவருக்குள்ளும் மன ரீதியாக ஏராளமான பிரச்சினைகள் உண்டாகின்றன. அது குடும்பத்துக்குள் சிறுசிறு சச்சரவுகளாக உண்டாகும்.

மாதத்தின் 30 நாட்களும் கூட உறவில் ஈடுபடலாம். அது இருவருக்குமிடையுயான நெருக்கத்தை அதிகரிப்பதோடு உடலில் ஏராளமான ஹோர்மோன் பிரச்சினைகளையும் சரிசெய்யும்.

ஆனால் குறைந்தபட்சம் மாதத்தில் 11 முறையாவது உடலுறவில் ஈடுபடுவது அவசியம்.