Home காமசூத்ரா காதலுக்கும் காமத்துக்கும் இவ்வளவு தான் வித்தியாசமாம்…

காதலுக்கும் காமத்துக்கும் இவ்வளவு தான் வித்தியாசமாம்…

31

ஆண் – பெண்ணுக்கு இடையே ஈர்ப்பு, காதல், காமம் என்ற மூன்றும் காதில் கேட்கும்போதெல்லாம் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் மந்திர வார்த்தைகள். இந்த மன்மத கடலுக்குள் விழுந்து கரைந்து போக விரும்பாதவர்களென யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த மூன்றுக்கும் ஒரு சிறிய நூழிலை தான் வேறுபாடு.

ஒருவருக்கு மற்றொருவர் மேல் உண்டாகும் உள்ளார்ந்த உணர்வுதான் காதலாகப் பூக்கிறது. இது இருவருக்குமிடையே ஒருவித நம்பிக்கை சார்ந்த இணைப்பை உண்டாக்கக்கூடியது. அப்படியே இதிலிருந்து வேறான ஒன்றாக காமம் இருக்கிறது.

காமத்துக்கு அடிப்படை உடல் ரீதியான ஈர்ப்பு தான். ஒருவரின் உடல்மீதான அதிகப்படியான விருப்பம் தான் காமமாக மாறுகிறது. அந்த பிசிக்கல் அட்ராக்க்ஷன் ஒருவித ரொமாண்டிக் லவ்வாகக்கூட மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.

காதலின் அறிகுறிகள்

காதலை யார் முதலில் சொல்வது என்ற தயக்கம் ஆண் – பெண் இருவருக்குமே இருக்கும். ஆனால் வெளிப்படுத்தியவுடன் மனம் போடும் கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது. அழகான உறுதியான காதல் எது என்பதை எப்படி புரிந்து கொள்வது ? அதன் அறிகுறிகள் தான் என்ன?

உங்கள் மனதுக்குப் பிடித்தவருடன் செலவு செய்யும் நேரத்தை குவாலிட்டி டைமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல்

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் புரிந்துகொள்வது, மகிழ்ச்சிப்படுத்துவது

ஆணோ பெண்ணோ சிறந்த நபராக மாறுவதற்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொள்வது தான் விரும்புபவரின் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சந்திக்க விரும்புவது இவையெல்லாம் இருந்தால் நிச்சயம் சந்தேகமே வேண்டாம். அதற்குப் பெயர் தான் காதல்.

ஈர்ப்பின் அறிகுறிகள்

ஈர்ப்பு என்பது எதிர் பாலினத்தின் மீதான ஒருவகை நேசம். எப்போது உங்களுக்குப் பிடித்த நபர் உடன் இருக்கிறாரோ அப்போது மட்டும் அந்த நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பது இவர் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்ற கட்டாயம் ஏதுமில்லாத மனநிலை நீ எனக்கு மிக அருகில் இருப்பதால் நமக்குள் ஈர்ப்பு உண்டானது என்று தோன்றுதல் ஈர்ப்பு என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம்.

ஆண் – பெண் எதிர் பாலினத்துக்கிடையே மிக விரைவாகத் தொற்றிக் கொள்ளும் பாக்டீரியா தான் இது. இதைக் காதலென்றெல்லாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை.

காமமே பிரதானம் என்னும் அறிகுறிகள்

விரும்பும் நபரின் உடல்மீதே உங்களுடைய முழு கவனமும் இருக்கும்.

உடலுறவில் அதிக விருப்பம் கொண்டிருப்பீர்கள். ஆனால் அவர்களுடன் பேசுவதற்கப் போதிய நேரம் ஒதுக்க மாட்டீர்கள்.

வெறுமனே ஒருவித மயக்கத்துக்காக மட்டுமே பேசிக்கொண்டிருப்பீர்கள். உண்மையான உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள விரும்ப மாட்டீர்கள்.

உங்களுடைய உறவு உடலுறவுக்குப் பின் அன்றைய இரவு உணவுடனோ அல்லது அதிகபட்சம் அடுத்தநாள் காலை டிபன் சாப்பிட்டவுடனோ முடித்துக் கொள்ள விரும்புவீர்கள்.

உங்களுக்குள் காதலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது நட்புடனான காதல் இல்லை.