Home ஜல்சா காதலின் உச்சக்கட்டம்: இதயம் படபடக்கும்…கண்கள் விரிவடையும்

காதலின் உச்சக்கட்டம்: இதயம் படபடக்கும்…கண்கள் விரிவடையும்

57

indian-couple-nude-sexகலிபோர்னியா பல்கலைகழகத்தில் காதலர்களை வைத்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் மூலம் காதலிப்பவர்களின் மனநிலைகளில் பல்வேறு மாற்றங்கள் ஒரே மாதிரியாக உள்ளது என்று கண்டுபிடித்தார்கள்.

காதல் செய்பவர்கள் எப்போதும் ’எதையும் தாங்கும் இதயம்’ என்று கூறுவார்கள்.

இதனால் இவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆராய்ந்த போது, அவர்களின் நல்ல கண் பார்வை, எலும்பு வலிமை, இருவருக்கும் ஒரே மாதிரியான இதயத்துடிப்பு என்று பல வினோதமான விஷயங்கள் ஒரே மாதிரியாக காணப்படுகிறது.

ஆய்வாளர்களின் காதலர்களை குறித்த ஆராய்ச்சிகளின் முடிவில், காதலிக்கும் தம்பதிகளிடையே உடல் மற்றும் மனம் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்வோம்!

ஒருவருக்கு நேர் எதிர் ஒருவர் நிற்க வைத்து, மூன்று நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் காதலர்களான இருவரின் இதயத்துடிப்பும் ஒரே மாதிரி இயங்குவதை கண்டறிந்தனர்.
கட்டிப்பிடி வைத்தியம் என்று சொல்வதால், காதலர்கள் கட்டியணைத்துக் கொள்ளும் போது, மேற்கொண்ட ஆராய்ச்சியில், காதலர்களின் உடம்பில் வலிநிவாரணி சுரப்பி அதிகம் சுரக்கிறது. இதனால் அவர்கள் உடலில் எற்படும் வலி குறைவாக உணர முடிகிறது என்று கண்டுபிடித்தனர்.

ஒரு ஆண் மற்றும் பெண் தாங்கள் அதிகமாக விரும்பும் நபர்களை பார்க்கும் போது, அவர்களின் கண்கள் பெரியதாக விரிகிறது. மேலும் இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் ஆண்களிடம் அதிகம் நடக்கிறது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காதலர்களிடையே காதல், பொறாமை, பகைமை என்ற மூன்று தலைப்புகள் குறித்து கடிதங்கள் எழுதுவதற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேலும் எழுதி முடித்த அனைவருக்கும் மிட்டாய்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காதல் குறித்து கடிதங்கள் எழுதியவர்கள், மிட்டாயின் அதிகமான இனிப்பை உணர்ந்ததாக கண்டறிந்தனர்.
காதலில் அதிகமாக அன்பை வெளிப்படுத்தும் நபர்கள் தங்கள் உணர்ச்சிவசம் நிலைகளில் வலிமையாகவும், எந்த சூழலில் எப்படி கையாள்வது என்றும் நன்கு தெரிந்து வைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

காதலிப்பவர்கள் மற்றும் காதலிக்காத 15 நபர்களின் அனைவருடைய கைகளிலும் சூடு வைக்கப்பட்டது. பிறகு அவர்களது கைகளில் அவர்கள் விரும்பும் நபரின் புகைப்படங்கள் தரப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் காதல் செய்யாதவர்களுடன் ஒப்பிடும் போது, காதலிக்கும் நபர்கள் 15% வரை வலியை குறைவாக உணர்ந்தது கண்டறியப்பட்டது.
காதல் திருமணம் செய்தவர்களில் 25 வயது மற்றும் அதற்கு மேல் அதிக வயதுடைய காதல் திருமணமான நபர்களில், தங்களுக்கு உறுதுணையாக மற்றும் பக்கபலமாக இருக்கும் துணை கொண்டுள்ளவர்களின் எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்கிறது என UCLA ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.