Home உறவு-காதல் அவர் உங்களை காதலிக்கிறாரா? அடக்கி ஆள நினைக்கிறாரா? – எப்படி அறிவது?

அவர் உங்களை காதலிக்கிறாரா? அடக்கி ஆள நினைக்கிறாரா? – எப்படி அறிவது?

29

captureநாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல தான் ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு உறவுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இதில் 50% மேல் எது ஓங்கி நிற்கிறதோ அதை வைத்து அவர் நல்லவர், கெட்டவர் என நாம் தீர்மானிக்கிறோம். இது கணவன், மனைவிக்கும் பொருந்தும். இந்த வகையில், உங்கள் துணை உண்மையாகவே உங்கள் மீது பிரியம் செலுத்தி காதலிக்கிறாரா? அல்லது உங்களை அடக்கி ஆள நினைக்கிறாரா? என்பதை எப்படி அறிவது என இங்கு காண்போம்…

இது தான் சரி! உங்கள் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வது. இதை சாப்பிடுங்கள், இதை தவிர்த்து விடுங்கள், இந்த டயட் உங்கள் உடலுக்கு சரியானது அல்ல, இந்த பயிற்சிகளில் ஈடுபடுங்கள் என உங்கள் மனதின் மீது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்வது காதல்.

இது தான் தவறு! நீங்கள் எங்கேனும் நபர்களுடன், அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபர்களுடன் வெளியே செல்ல, பயணிக்க முயலும் போது என ஒவ்வொரு செயலின் போதும் என்னுடன் நேரம் செலவழியுங்கள். இதையும் மீறி சென்றால் உங்களுடன் பேசமாட்டேன் என அடம் பிடிப்பது, தான் செய்வதை மட்டும் செய்யுங்கள், என்னுடன் மட்டும் இருங்கள் என்பது போன்றவை அடக்கி ஆள நினைக்கும் பண்பு.

இதுவும் சரி! உங்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுத்துக் கொள்வது. பயணிக்கும் போது காலத்துக்கு ஏற்ற உடைகள் எடுத்து வைப்பது, முதல் உதவி தயார் செய்து வைப்பது, வாகனம் ஓட்டும் போது ஹெல்மட் அணிய கூறுவது என, உங்களுக்கு சிறிய தாக்கம் கூட ஏற்பட்டு விட கூடாது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் குணம் தான் காதல்!

இது ரொம்ப தப்பு! தான் செய்வதை பின்பற்றுங்கள், நான் சாப்பிடுவதை சாப்பிடுங்கள், நான் கும்பிடும் கடவுளை நீங்களும் கும்பிட வேண்டும், எனக்கு பிடித்தவை உங்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அடக்கி ஆள நினைக்கும் குணம்.

இது தான் காதல்! தன்னை விட உன்னை யாரும் அதிகம் காதலித்துவிட முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கும் பண்பு. முடிஞ்சா என் அளவுக்கு உன்ன காதலிக்கும் நபர தேடி புடி பாப்போம் என தன் காதல் மீது கொண்ட நம்பிக்கையால் சவால் கூட விடுவார்கள் பாருங்கள். அது தான் காதல்.

இது தான் அடக்கி ஆள்வது! அவர்களுக்கு பிடிக்காத செயலில் நீங்கள் ஈடுபடும் போது தன்னை தானே தண்டித்து கொள்வது போன்று நடந்துக் கொண்டு, உங்களை தண்டிக்க முயற்சி செய்வது. இதன் காரணமாக உங்களை அந்த செயலை மீண்டும் செய்ய விடாமல் செய்வது தான் அடக்கி ஆள்வது.