Home உறவு-காதல் காதலுக்கும் காமத்திற்கும் உணர்வு ஒன்றுதான் தெரியுமா?

காதலுக்கும் காமத்திற்கும் உணர்வு ஒன்றுதான் தெரியுமா?

157

காதல் உறவுகள்:ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் மற்றும் காம உணர்வுக்கு அதிகளவில் வித்தியாசங்கள் இருப்பதாக காதல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மெல்லிய ஆழமான உணர்வுகளை பிரதிபளிப்பது காதல், வல்லிய ஆபாசமான உணர்வுகளை பிரதிபளிப்பது காமம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் மீது மற்றொருவருக்கு ஏற்படும் உள்ளார்ந்த உணர்வும், நம்பிக்கை இணைப்பும் தான் காதல் என்று பார்க்கப்படுகிறது. இதுவே காமத்தில் உடல் மீதுள்ள ஈர்ப்பு மட்டுமே பிரதாணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த காமம் என்பது உடல் மீதான போதையை உண்டாக்கும் என்றாலும், இது நாளடைவில் காதலாக மாறவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். காதலுக்காக எத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கும் ஆணும், பெண்ணும், காம இன்பத்திற்காக ஒருவரையொருவர் பிடிக்காவிட்டாலும் உடல் பசியை போக்க உறவு கொள்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

காதல் என்பது உணவை பார்த்து ருசிப்பது, ஆனால் காமம் அந்த உணவை அனுபவித்து உண்பது என காதல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களின் காம உணர்வுகள் மிகவும் வித்தியாசமானவை. தேவையான செக்ஸ் அனுபவம் கிடைத்த பின்னர், காம போதைக்கு வேறு பெண்ணை நாடும் ஆண்கள் ஏராளம். ஆனால் ஒரு பெண்ணை பொருத்தமட்டில் தன்னுடன் காம இச்சையை பகிர்ந்த ஆண் மீது உடல் ஈர்ப்பையும் தாண்டி மனதளவில் அந்த ஆணை தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள் என கூறுகின்றனர்

காதல் மிக மெல்லிய, அற்புதமான உணர்வு என்றாலும், அதுனுடைய வலியும் சுமையும் அதிகம். காமத்திற்கு அப்படி மனதளவில் வலி ஒன்றும் இல்லை. முடிந்த வரை ஒப்புக் கொண்டால் சரி, இல்லையென்றால் ஒரு பிரச்னையும் இல்லை என்ற எண்ணம் தோன்றும். உடலிற்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே காமம், காதல் என்கின்றனர்.