உடலுறவு ஒரு அற்புதமான உணர்வைத் தரும், ஆனால் கர்ப்பமாவதை நினைக்கும் போது தான் பல தம்பதிகளும் அச்சம் கொள்வார்கள்.
இருப்பினும் பல பெண்கள் எதிர்பாராமல் கருத்தரித்துவிடுவார்கள்.
அதிலும் தற்போதைய காலத்தில் தம்பதிகள் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையும் வரை குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கிறார்கள்.
அதற்காக வாழ்வில் நல்ல நிலையை அடையும் வரை, உறவு கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன?
கர்ப்பமாகாமல் இருக்கவே தற்போது பல முறைகள் உள்ளன. ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கருத்தரிக்காமல் இருக்க இயற்கை வழிகளையே மேற்கொண்டனர்.
அவர்கள் மேற்கொண்ட முறைகள் என்னவென்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஏனெனில் அவை விசித்திரமானதாக இருக்கும். சரி, இப்போது அவற்றை சிலவற்றைக் காண்போம்.
எலுமிச்சை
1700 இல் கருத்தரிக்காமல் இருக்க, எலுமிச்சை துண்டை யோனியில் நுழைக்கும் பழக்கத்தை மக்கள் கொண்டிருந்தனர்.
இந்த முறையால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் விந்தணுக்களை அழித்து கருத்தரிக்க முடியாமல் செய்யுமாம்.
உருளைக்கிழங்கு
அக்காலத்தில் கருத்தரிக்காமல் இருக்க பெண்கள் உருளைக்கிழங்கை யோனியில் நுழைத்துக் கொள்வார்களாம். இச்செயலால் பெண்கள் உள்ளே நுழைத்த உருளைக்கிழங்கை வெளியே எடுக்க முடியாமல் அவஸ்தைப்பட்டதோடு, சிலருக்கு உருளைக்கிழங்கு வேர் விட்டு யோனியிலேயே வளர ஆரம்பித்துவிட்டதாம். இதனால் இப்பழக்கம் கைவிடப்பட்டது.
சோடா பானங்கள்
மற்றொரு விசித்திரமான முறை, சோடா பானங்களைக் கொண்டு யோனிப் பகுதியை கழுவுவது. இப்படி செய்யும் போது, சோடா பானங்கள் விந்தணுக்களை அழித்துவிடும் என்று அக்கால மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
காட்டன்
பழங்காலத்தில் பெண்கள், பேரிச்சம் பழம், அக்காய் மரப்பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, காட்டனில் நனைத்து அந்த காட்டனை யோனியி வைக்கும் போது, அது விந்தணுக்களை அழிக்க ஆரம்பிக்குமாம்.
தும்மல்
ஆம், அக்காலத்தில் தும்மல் கூட கருத்தரிக்க தடையாக இருக்கும் என கருதினர். அதிலும் உடலுறவு கொண்ட பின் தும்மினாலோ அல்லது மூச்சை அடக்கினாலோ மற்றும் குதித்தல், ஓடுதல் போன்றவற்றை பின்பற்றினாலோ, அப்பெண்ணால் கருத்தரிக்க முடியதாம்.
பப்பாளி
இம்முறையை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். கனியாத ப்பாளியை சாப்பிட்டால், அதில் உள்ள பைட்டோகெமிக்கல், புரோஜெஸ்டிரோனை இடையூறு செய்து, கருவுறாமல் தடுக்கும்.