கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டமாகும்; இந்த நாட்களில் அதாவது குழந்தை தன் வயிற்றில் உண்டான அந்நொடி முதல் குழந்தையை பிரசவித்து கையில் ஏந்தும் அந்தத் தருணம் வரை கர்ப்பிணியின் மனது பலவித சந்தேகங்களுடனேயே பயணிக்கிறது.
கர்ப்பகாலத்தில், சூடான பானங்கள் பருகினால், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சுடுமா?
“அன்னை சூடான பானங்கள் பருகினால், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சுடும் என்பதெல்லாம் கற்பனை; கருவிற்கு சுடாது. பொதுவாகவே சிலருக்கு மிதமிஞ்சிய சூட்டில் பானங்களையும், உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.
அவ்வாறு சாப்பிடுகையில், உணவுக்குழாய் புண்ணாகி அல்சர் வரும் அபாயம் உள்ளதால், சூடாக உண்ணுதல் ஆகாது என்பதே மருத்துவ ரீதியான காரணம்.’’
கர்ப்பகாலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாதா?
“கர்ப்பிணிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்; சளி பிடிக்காது இருக்கும் வரை பிரச்சனையில்லை. கர்ப்பகாலத்தில், சாதாரண நாட்களில் எடுத்துக் கொள்ளும் சளி, இருமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாது.
ஏனினில், அம்மருந்துகள் வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனாலேயே முன்னோர்கள் கர்ப்பிணிகளை அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதே இல்லை.’’
கர்ப்பகாலத்தில், சர்க்கரைக்கு மாற்றாக தேன் கலந்து உண்ணலாமா?
“ரத்தத்தின் சர்க்கரை அளவில் (Blood Sugar) இன்சுலின் குறைவாக கொண்டிருப்பவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக தேன் பயன்படுத்தலாம்; இரத்தத்தின் சர்க்கரை அளவில் இன்சுலின் அதிகமாக கொண்டிருப்பவர்கள் தேன் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கக்கூடும்.”
கர்ப்பகாலத்தில், மூலிகை (herbal) டீ, மூலிகை (herbal) ஆரோக்கிய பானங்கள் (health drinks) பருகலாமா?
இந்த மாதிரியான மூலிகை (herbal) சார்ந்த பானங்களை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடுத்துக் கொள்ள வேண்டும்..! அதுவே, கருவிற்கு நலம் பயக்கும்..!
கர்ப்பகாலத்தில், கிரீன் டீ பருகலாமா?
“கர்ப்பகாலத்தில் கிரீன் டீ பருகலாம்; இதில் ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பதால் வயிற்றில் உள்ள கருவின் இதயம் மற்றும் மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல்லது.-