சமீபத்திய ஒரு புதிய ஆய்வில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், அப்போதே மீண்டும் கருத்தரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இறுதியில் பிரசவத்தின் போது, அப்பெண் ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகளை பிரசவிப்பார்கள் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இப்போது இக்கட்டுரையில் அந்த ஆய்வு குறித்தும், அது எப்படி எனவும் விரிவாக காண்போம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சூப்பர்ஃபெடேஷன் (Superfetation)
இப்படி கருத்தரிக்கும் நிலைக்கு ‘சூப்பர்ஃபெடேஷன்’ என்று பெயர். பொதுவாக இம்மாதிரியான நிலை மிருகங்களிடம் தான் இருக்கும். ஆனால் மிகவும் அரிதாகவே மனிதர்களால் முடியும். ரிப்போர்ட் ஒன்றின் படி, இதுவரை சுமார் 11 பேருக்கு இம்மாதிரி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கருமுட்டையின் வளர்ச்சி
கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்ப காலத்தில் பெண்களின் உடலில் கருமுட்டைகள் வெளிவரும். இந்நேரம் உடலுறவில் ஈடுபடும் போது, இரண்டாம் கருவானது முதல் கரு உருவான சில நாட்களுக்குள் உருவாகும். இதன் காரணமாக இறுதியில் இரண்டு குழந்தைகளை பிரசவிக்கக்கூடும்.
எளிமையானது அல்ல
இம்மாதிரி தாமதமாக கரு உருவானாலும், பிறக்கும் போது இரண்டு குழந்தைகளும் தான் வெளியே வரும் என ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. தனித்தனியாக இடைவெளி விட்டு கரு உருவானதால், கடைசியாக உருவான குழந்தை, முதலில் உருவான குழந்தையை விட சற்று பலவீனமாகவே இருக்கும். அதாவது, இந்நிலையில் பிறக்கும் இரண்டாவது குழந்தை குறைமாதத்தில் பிரசவித்தாகவே கருதப்படுவதால், இரண்டாவது குழந்தை உயிருடன் இருக்கும் வாய்ப்பும் குறைவாகவே இருக்குமாம்.
ஆபத்தான நிலை
இம்மாதிரியான நிலை அரிதானதாகவே இருந்தாலும், எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு கருத்தரிப்பதை விரும்பமாட்டார்கள். முதல் குழந்தை ஆரோக்கியமாக இருந்து, தனது இரண்டாவது குழந்தை குறைப்பிரசவ குழந்தையாக இருந்தால், அதுவும் உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் இருந்தால், அதுவே அந்த தாயின் உணர்வை பெரிதும் பாதித்துவிடும்.