Home பாலியல் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா? கூடாதா?

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா? கூடாதா?

22

captureபுதிதாக திருமணமான தம்பதிகள் பலருக்கும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா என்ற சந்தேகம் மனதில் இருக்கும். இதுக் குறித்து அனுபவசாலிகளிடம் கேட்டால், சிலர் ஈடுபடலாம் என்றும், இன்னும் சிலர் கூடாது என்றும் கூறுவார்கள். உண்மையில் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றெல்லாம் இல்லை. வயிற்றில் வளரும் சிசுவிற்கு அதிர்வு ஏற்படாதவாறு, பாதுகாப்பான உறவில் ஈடுபட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. இங்கு கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடுவது குறித்த சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான நிலை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது, வயிற்றில் அழுத்தம் கொடுக்காதவாறான பாதுகாப்பான நிலையில் உடலுறவு கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த பாதுகாப்பான நிலையிலும் அசௌகரியத்தை உணர்ந்தால், அதையும் தவிர்த்திடுங்கள்.

உயவுப்பொருள் கர்ப்ப காலத்தில் பெண்களின் யோனிப் பகுதி சற்று வறட்சியுடனும், அரிப்புடனும் இருக்கும். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான். எனவே உயவுப்பொருளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

முன்விளையாட்டுக்கள் கர்ப்பமாக இருக்கும் போது முன்விளையாட்டுக்களில் ஈடுபடுவதால், பெண்களின் மனநிலையை அமைதியாக்கி, ரிலாக்ஸ் அடையச் செய்து, மன அழுத்தமின்றி வைத்துக் கொள்ளும்.

அதிர்வுகளைத் தவிர்க்கவும் பனிக்குடநீர் நிறைந்த பையினுள் இருக்கும் வரை தான் குழந்தை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வயிற்றில் அதிகப்படியான அதிர்வு மற்றும் அளவுக்கு அதிகமான அசைவில் ஏற்படும் போது பனிக்குடப் பையில் பாதிப்பு ஏற்படும். எனவே கவனமாக உறவில் ஈடுபடுங்கள். குறிப்பாக கர்ப்பத்தின் இறுதி மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முதல் மாதத்தில் உறவு கர்ப்பமான முதல் மூன்று மாதத்தில், கரு வளர ஆரம்பித்திருக்கும். இக்காலத்தில் அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டால், அதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.