Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் ஏன் அதிகளவில் வெள்ளைப்போக்கு காணப்படுகிறது தெரியுமா..?

கர்ப்ப காலத்தில் ஏன் அதிகளவில் வெள்ளைப்போக்கு காணப்படுகிறது தெரியுமா..?

78

கருப்பையில் உள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள சருமம் இறுக்கமாகத் தொடங்குகிறது.

இதனால், வரிக் கோடுகள் தோன்றி அப்பகுதியில் நமைச்சல் எடுக்கும். உடல் முழுவதும் நமைச்சல் அதிகமாக இருந்தால் கல்லீரல் பிரச்னை இருக்கக்கூடும். மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

மென்மையான, தளர்த்தியான ஆடைகளை அணிவது நல்லபலன் தரும். குளிப்பதும் நல்ல பலனைத் தரும். நமைச்சல் உள்ள இடத்தில் களிம்புகள் அல்லது லோஷன்கள் டால்கம் பவுடர்களைத் தடவுவது இதமாக இருக்கும்.

தொடர்ந்து வெள்ளைப்போக்கு ஏற்படுகிறது. இது ஏன்? இதனால் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? வெள்ளைப்படுதலைத் தடுக்க என்ன செய்யலாம்?

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும் அதிகளவில் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, நமைச்சலோ ஏற்படாதவரை அது முற்றிலும் இயல்பானதே.

தேவைப்பட்டால் டேம்ப்பூன் எனப்படும் அடைப்பான்கள் பயன்படுத்தலாம். புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளைப்பட்டால், உங்களுக்கு சிலவகையான புணர்புழைத் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு தொற்றும் கிருமிகளில் பொதுவானது காண்டிடியாஸ் என்ற கிருமி. இது ஒரு பூஞ்சன நோய்த் தொற்று ஆகும்.

இது புணர்புழைச் சுவரைச் சுற்றி வெள்ளை நிறத் தயிர் போன்ற பொருள்போல் ஒட்டிக்கொண்டிருக்கும். மருத்துவர் ஆலோசனையுடன் களிம்புகளையோ, மருந்துகளையோ பயன்படுத்தலாம். இதனால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பிரச்னை எதுவும் ஏற்படாது.