Home குழந்தை நலம் கர்ப்பக் காலத்தில் பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்பக் காலத்தில் பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

58

201609151129306027_changes-in-women-breasts-during-pregnancy_secvpf* உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால் சில சுரப்பிகள் அதிகரிக்கும். இந்த சுரப்பி மார்பகம் பெரிதாக காரணியாக இருக்கின்றது. இதனால், கர்ப்பக் காலத்தில் பெண்கள் மார்பகத்தை சற்று பாரமாக உணர்வார்கள்.

* நீல நிறத்தில் நரம்புகள் மார்பக பகுதியில் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் அதிகப்படியான இரத்த ஓட்டம் தான்.

* கருவுற்ற பெண்கள் சிலருக்கு மார்பக முலைக்காம்பு பகுதி கடினமாகவும், பெரிதாகவும் காணப்படும். திசு பெரிதாகும் போது சில பெண்கள் மத்தியில் இந்த மாற்றம் காணப்படலாம்.

* இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் போதே கர்ப்பிணி பெண்களுக்கு பால் சுரக்கும். இதனால், அவர்களுக்கே அறியாமல் பால் வடிதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் முன்னரே பால் வடிதல் உண்டாவது இயல்பு தான்.

* மார்பகங்கள் திடீரென பெரிதாவதால் ஸ்ட்ரெச் மார்க் உண்டாகலாம்.

* மார்பகங்கள் பெரிதாவதால் தொங்குவது போன்ற தொய்வு காணப்படும். இது கர்ப்பக் காலத்தில் குறைவாக இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க, பெண்கள் பிரசவத்திற்கு பிறகு முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.