Home சமையல் குறிப்புகள் கசகசா கோழிக்கறி குழம்பு

கசகசா கோழிக்கறி குழம்பு

31

சுவையான எளிதாக முறையில் சமைக்கக்கூடிய கசகசா கோழிக்கறி குழம்பு எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1/2 கிலோ
தக்காளி- 3
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 1
சோம்பு – சிறிதளவு ( அரைக்கவும்)
நசுக்கிய இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1/2 கப் (அரைத்தது)
தேங்காய்ப்பால் – 1/2 கப்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு

தாளிக்க

பட்டை -1 இன்ச்
கிராம்பு – 2
அனாசி பூ -2
ஏலக்காய் – 1
கருப்பு இலை -1

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, அனாசி பூ, கிராம்பு, ஏலக்காய், கருப்பு இலை சேர்த்து தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகத் தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், அரைத்த சோம்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கடாயை மூடி 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

தக்காளி வெந்ததும் கோழியைப் போட்டு கிளறி விடவும். தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்னர், கோழிக்கறி வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

பிறகு, கோழிக்கறியில் கெட்டித் தேங்காய்ப்பாலை ஊற்றி அரைத்த கசகசா, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன் மேலாக கொத்தமல்லி தழையைத் தூவி விட்டு பரிமாறவும்.

கசகசா கோழிக்கறி குழம்பு ரெடி!